தட்டியதில் நழுவியதும், மீண்டும் தட்டுப்பட்டதும்....
பத்ரியின், பழைய பதில் ஒன்றுக்கு பதில் எழுதிவிட்டு பதியாமல், இந்தியா செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. அது இப்போதுதான் கணினியில் கண்ணில் பட்டது. அது குறித்த மேற்கொண்ட எனது சிந்தனைகள்.
<===========================>
ரஜினி ராம்கி: அன்பு ராம்கி,//எந்த சமூதாயமும் தங்களை முன்னேறிவிட்ட சமுதாயமாக ஒத்துக் கொள்வதே இல்லை.// உண்மைதான். இதை இரண்டுவிதமாக பார்க்கலாம். ஒன்று. தலித் சமுதாயத்தில் முன்னேறியவர்களுக்கு சலுகைகள் செல்வதை தடுப்பது அல்லது குறைப்பது. இரண்டாவதும் முக்கியமானதும். இத்த்னை சலுகைகள் அளித்தும் முன்னேறே முடியாமல் இருக்கும் அன்றாடங்காய்ச்சிகளை முன்னேற்றுவது குறித்து யோசிப்பது. இரண்டாவதற்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்பதைத்தான் நான் வரவேற்கிறேன்.
ஒரு தீர்மானமான அளவுகோலைக் கொண்டுதான் செய்யவேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் அது போன்றொதொரு அளவுகோலை நிர்ணயிப்பதில்தான் பிரச்சினையே. அது பொருளாதார அடிப்படையில் இருக்கலாம்.
பொருளாதார அடைப்படையில் சலுகைகளைத் தரலாம் என்றால், பிற்படுப்படுத்தப்பட்ட , மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் இதுவரை சம்பாதித்து வைத்திருப்பதை எந்தக் கணக்கில் சேர்ப்பது? சரி இது போன்றொதொரு அளவுகோலுக்கு முன்னேறிவர்கள் ஒத்துக் கொள்வார்களா? மாட்டார்கள். ஏன்?
நான் ஜனநாயகமாய் , சட்டத்தை ஏமாற்றாமல் எத்தனை வேண்டுமானுலும் சம்பாதிப்பேன். அதனால் நான் சலுகைகளை இழக்கவேண்டுமா? என்ற கேள்வி வரும். என்ன பதில் உள்ளது?
திருமலை: அன்புள்ள திருமலை, சிவகாமியின் பதிலில் ஏதும் சுயனலம் இருப்பதாகப் படவில்லை? சிவகாமியின் பிள்ளைகள் மேலும் மேலும் சலுகைகள் அடையக்கூடாது என்றால், சிவகாமியின் தந்தை பீ அள்ளினாரே, அவரது வாழ்நாளும் அதிலேயே கழிந்துவிட்டதே, அதற்கு ஈடாய் இத்தனை லட்சம் கொடுக்கலாம் என்று சட்டம் கொண்டுவரலமா? நான் சொல்லவருவது. தலித்துகளின் முன்னெற்றத்தில் இன்னும் அதிக ஈடுபாடு வேண்டும் என்பது மட்டுமே
////பரம்பரை, பரம்பரையாக இந்த சலுகையை ஏற்கனவே அனுபவித்தவ்ர்களின் வாரிசுகள் மட்டுமே அனுபவிப்பதாலும், அபகரித்துக் கொள்வதாலும், உண்மையிலே தாழ்த்தப்பட்ட, சமுதாயத்தின் கடை நிலையில் இருக்கும் மக்களுக்கு இந்த சலுகையின் பயன் சேராமல் இருக்கிறது.////
இல்லை. அப்படி இல்லை. இது சென்னை போன்ற நகரங்களில், கல்லூரிகளிலும் அலுவலகங்களிலும், நேருக்கு நேர் பார்ப்பதால் வரும் ஒரு மேம்போக்கான கண்ணோட்டம். இதை இன்னும் விரிவான, அலசலுக்கு உட்படுத்தவேண்டும். எத்தனை சதவீதம் , பிறபடுத்தப்பட்ட்ட குடும்பத்தினர் வருவாய் உயர்ந்துள்ளது? எத்தலை தலித் குடும்பங்கள் அதிக வருவாயில் உள்ளனர் என்று கணக்கெடுப்பு நடத்திய பின்னரே இது போன்று எழுதமுடியும். வருவாயின் அடிப்படையில் சலுகைகள் அளிக்கப்பட்வேண்டும் என்றால் கூட, நன்றாக கணக்கு காட்டத்தெரிந்தவர்களுக்கு மட்டுமே சலுகைகள் சென்று சேரும் என்றாகிறது. உண்மையாய் கஷ்டப்படுபவர்களுக்கு சலுகைகள் செல்லவேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை.
திட்டத்தில் ஓட்டை இல்லை. திட்டம் அவர்களை ஏன் சென்றடைவதில்லை என்பதில்தான் நாம் முனைப்பு காட்ட கடமைப் பட்டுள்ளோம்.
தனியார் துறையை லாபம் ஈட்டும் எந்திரமாக பார்க்கலாம். அல்லது ஒரு சமூக அங்கமாக பார்க்கலாம். சமூக அங்கமாக பார்க்க நமது சமூகத்தில் போதிய காரணங்கள் உள்ளது.
இதை 10 பைசாவை 20 பசைவாக மற்றும் திறமையாகப் பார்க்கலாம். அல்லது லாபமாய் வந்த 10 பைசாவில் சாப்பட்டுக்கு இல்லாதவனுக்கு, 2 பைசாவுக்கு கஞ்சி ஊத்துவதைப் பத்திக் கவலைப்படலாம். இரண்டாவதுவே சமூகக் குடும்பிகளின் வேலை. முன்னதைச் செய்ய முதலாளிகள் ஏராளமாக உள்ளனர்.
லாபமில்லாத தனையார் துறை நிறிவனங்கள் வெகு விரைவில் மூடப்படுங்கின்றன்வே!. :)

கல்லறைப்பூவும் பனித்துளியும்...
கல்லறைப்பூவும் பனித்துளியும்
============================
(இக்கதையில் வரும் விபத்து உண்மைச் சம்பவத்தின் தழுவலில் எழுதப்பட்டது)
அந்த கல்லறையில் பூக்களிலிருந்து சொட்டும் பனித்துளிகள் ராமசாமிக்காகவே கண்ணீர் விடுவது போலக் காட்சியளித்தது. 'ராமசாமி' என்ற பெயர் இங்கு எப்படி பலகையில் வந்தது? எததனையோ சாதனைப் பட்டியலில் இருந்த அதே பெயர். அதே எழுத்துக்கள்.
ராமசாமி படித்தது என்னமோ கிராமத்தில்தான். லால்குடி,ஹாஸ்டல்,வயல், அதிகாலை சூரியன், சோளக் கஞ்சி, ரப்பர் செருப்பு, சைக்கிள் என்ற வாழ்வு வட்டம்தான் அவனது மாணவப்பருவம். ஆனாலும் பாடப்புத்தகங்களில் சில பக்கங்கள் அவனுக்கு சிரிப்பை வரவழைக்கும் அளவுக்கு அறிவுக் கீற்று அவனிடமிருந்து கிளம்பியது. பிரகாசமான முகம். ஆண்மகன் என்று சொன்னால் அது ராமசமிக்கு மிகவும் பொருந்தும்.
நகரம் போக வேண்டிய சூழ்நிலை அவனுக்கு கையறுப்பு போலத்தான் இருந்தது. நகரத்தின் நாகரிகம் அவனை எத்தனை முறை குற்ற உணர்வுக்கு ஆளாக்கியுள்ளது. அதில் முக்கியமான விஷயம் இந்த ஆங்கிலம்தான். என்னதான் நல்லா எழுதத் தெரிந்தைருந்தாலும் கொஞ்சம் வேகமாய் ஆங்கிலம் பேசுபவர்களைக் கண்டால் ராமசாமிக்கு லேசாய் ஒதுங்கவேண்டும் போல் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.
அவன் சென்னைக்கு வரும்போது கிராமத்து மக்களின் சோகம்தான் அவனை எப்படி உலுக்கியது. அதே அளவில் சந்தோசம் அவன் டாக்டர் ஆகப் போறான் எனபதிலும் அனைவருக்கும் இருந்ததை அவனே பார்த்தான். இந்த சோகமும் சந்தோஷமும் பல பொட்டலங்களில் முறுக்குகளாகவும், பனியார, அதிரசங்களாகவும் மாறி ஒரு பெரிய பை அளவுக்கு அவன் கைகளில் கணமாய் இருந்தது. அத்தனை பொட்டலங்களுக்கும் ஒரு பிரத்யேக குரல் இருந்தது, அவை 'ராமசாமீ என் கண்ணு', 'என்ன பெத்த ராசா', "பத்திரமா போ சாமீ" என்று பல விதத்தில் அன்பை ஒலித்தன். அம்மா வைத்திருந்த இட்லிக்கடையிலிருந்து முழுக் கவனத்துடன் செய்திருந்த பதினைந்து இட்லிகள், சட்னியின் வாசம் கொஞ்சம் தூக்கலாக.
வந்தே சேர்ந்துவிட்டான். டாக்டரும் ஆகிவிட்டான். ஆனால் கிராமத்து மண்வாசனையும், கோழிச்சத்தமும், அக்கறை ஒழுகும் கிராமத்துத் தமிழும், அவன் வண்டி ஏறிய நாளும் அப்படியே சிறிதும் மறக்காமல் இருந்தது சில சமயங்களில் அவனுக்கே ஆச்சரியம் ஊட்டுபவை.மனம் நிறைய, செய்துமுடித்தவை என்னென்ன என்று யோசித்துப் பார்ப்பான் ராமசாமி.
அம்மாவின் கடையை அடம் பிடித்துச் சாத்தச் சொன்னது. சம்பாதிக்கும் நிலைமைக்கு வந்தபின் அவள் ஏன் சம்பாதிக்கவேண்டும் என்று ஒரு கேள்விக்கு தானே பதிலளித்துக்க் கொண்டது.
முதன் முதலில் அவளுக்கு தன் சம்பளத்தில் புடவை வாங்கித் தந்தது.
கல்லூரியில் முழுமையாய் ஆங்கிலம் பேசத்தெரியாத, ஆனால் முதல் மாணவனாக மேடையேறி மெடலை அணிவித்துக் கொண்டது.
மேல்படிப்புக்கு நண்பர்கள் அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு வெளிநாடு போகும் போதும், இங்கேயே நிறைய சேவைசெய்யவேண்டும், முடிந்தால் கிராமத்தில் சீக்கிரம் சென்று அம்மாவுடன் தங்கிவிடவேண்டும் என்று ஆசைப்பட்டுக்கொண்டது.
காதலை ஆயிரம் முறை யோசித்துப் பார்த்தும், கண்ணாடி முன் பேசிப் பார்த்தும்,காதலியிடம் சொல்லி , அது வெற்றி பெறாதபோது யாருக்கும் தெரியாமல் அழுதது. அந்தக் காதல் இன்றுகூட பூக்களைக் கண்டால் ஞாபகத்துக்கு வருவது.
இப்படி பல. யோசித்துக் கொண்டே தான் வேலைசெய்யும் எய்ட்ஸ் மருத்துவமனையின் சன்னல் வழியே தெரிந்த தனது காதலியைப் பார்த்தான். தன்னையும் அறியும் அறியாமல் ஒரு முழு உத்வேகம் வந்து அடங்கியது மந்துக்குள். இதழ்களில் லேசான புன்னகையை மீதம் விட்டுச்சென்றது அந்த உத்வேகம். சுனிதா எத்தனை தூரத்தில் பார்த்தாலும் அழகுதான், அவன் கண்களுக்கு.
"அம்மா கொஞ்சம் கையை நீட்டுங்க, அப்படியே தோள்ப்பட்டை வரைக்கும் சாக்கெட் டை இழுத்துவிடுங்க " என்றான் ராமசாமி. "வலிக்காமல் ஊசி குத்தறதுக்கு அமெரிக்காவில் ஆராய்ச்சி செய்றாங்களாம், கண்டுபிடித்ததும், முதலில் ஒரு பாக்கெட் உங்களுக்கு வாங்கிவிட்டு, அதில்தான் தினமும் உங்களுக்கு ஊசி"என்றான்.
அந்த அம்மாளின் முகம் , அவனுக்கு சோகத்தை அளித்தது. இன்னும் ஆறு மாத வாழுவுதான் அவளுக்கு எய்ட்ஸ் அளித்திருந்தது. மூன்று குழந்தைகள். ஏற்கனவே கணவன் இல்லாதவள், இதில் இவளும் இப்படி ஆகிவிட்டால் , குழந்தைகள் என்ன ஆவார்கள். யோசித்துப்பார்க்கவே வெறுத்தான் ராமசாமி.
ட்ரிப்ப்ஸ் ஏத்திவிட்டுத் திரும்பியவன், டாக்டர்களின் வழக்கப்படி ட்ரிப்ஸ் ஊசியை தொங்கவிட அருகில் இருக்கும் ஸ்டாண்டில் மாட்ட்ப் போனான். சட்டென்று வலது கை தட்டி, வலக்கையிலிருந்த ட்ரிப்ஸ் ஊசி இடதுகையின் மேல் விழுகிறது. பார்த்துக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் லேசான கீறலை போட்டுவிட்டு கீழே விழுகிறது ஊசி.
"நர்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்" என்று தொண்டை கிழிய அலறினான் ராமசாமி. பக்கத்திலிருந்த கத்தியை எடுத்து மிக வேகமாய், ஊசி பட்ட இடத்தை கத்தியால் சீவினான். அவன் இதயத்துடிப்பு அவனுக்குச் சொல்லாமலே வேகத்தைக் கூட்ட்டி துடிக்க ஆரம்பித்த்து. அவன் கண்களை அவனாலேயே நம்பமுடியவில்லை. அது நடந்துவிட்டிருக்குமா? தொடை மிக மென்மையாக நடுங்கியது. எச்சில் கூட்டி விழுங்கினான். அதற்குள் நர்சும் வந்துவிட்டாள்.
அவன் முகத்தைப்பார்த்த நர்ஸ் மிகவும் கலவரப்பட்டுப் போனாள். "டாக்டர் நான் உடனே பிளட் டெஸ்டுக்கு அரேஞ்ச் பண்றேன்" என்று தலை தெறிக்க ஓடினாள். மனம் என்னதான் ஆசைப்பட்டாலும், அவனது டாக்டர் அறிவு, ஆபத்து வந்தே விட்டது என்று அவனுக்கு சொல்லியது. உண்மைதான்! அவனுக்கும் அவனது சேவையின் முடிவுக்கும் நாள் குறித்துவிட்டது எய்ட்ஸ்.
இது இப்படித்தான் நடக்கும் என்று அவனுக்கு தெரிந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. 'நல்ல வேளை சுனிதா என்னை ஏற்க்கொள்ளவில்லை. இல்லையெனில் அவள் வாழ்க்கை எப்படி நாசமாகியிருக்கும் என்னால்',என்று புலம்பிக்கொண்டான். இதோ அவன் புலம்பல் சத்தம் கல்லறைக்குள் ஒலிக்க ஆரம்பித்து ஓராண்டு ஆகிவிட்டது.
கல்லறையில் மலர்களை வைத்துக்கொண்டிருந்த சுனிதா, "நான் விவாகரத்து வாங்கியது , உனக்குத் தெரியவேண்டாம் என்றுதான்டா இரண்டு வருஷமா உன்னை வந்து பார்க்கல' என்று சொன்னது, ராமசாமியின் காதுகளில் விழவில்லை. "வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு உன்னை ஏற்றுக் கொள்ளாததுதான்" என்று மீண்டும் ஒருமுறை சுனிதா வேதனைப்பட்டாள்.
சந்தேகமேயில்லை! அந்தப் பூவின் பனித்துளி ராமசாமிக்காக அப்பூ வடித்த கண்ணீர்தான்.

காலில் இடர்பட்ட கற்களும், இறந்த மரவட்டைகளும்...
காலில் இடர்பட்ட கற்களும், இறந்த மரவட்டைகளும்.
திங்கள், ஆகஸ்ட் 2 2004.
இது ஒரு கடுமையான அனுபவம்தான். அவசர பயணம் என்ற விதத்திலும், பய(ண)த்துகுரிய காரணம் அப்படி என்பதாலும். எப்படிதான் உண்மையாய் எழுதினாலும், ஏதாவது லேசான மேற்குறிப்போ அதிகப்படியான உணர்வுப் படிதலோ வந்துவிடுகிறது எழுத்தில். இதுதான் இலக்கியக் கலப்பா? அல்லது இலக்கிய மனத்தின் கட்டுக்கடங்காமையா? அது இல்லாமல் எழுதுவதே இப்போதைய நோக்கம்.
மத்தியானம் 12 மணியளவில் அப்பாவிடம் பேசும்போது, அம்மாவின் உடல் நிலைமை சரியில்லை என்று தெரிந்தது. சாப்பாடு ஜீரணிக்கவில்லை. உப்பு உடலில் அதிக அளவில் சேர்ந்துள்ளதாக டாக்டர் சுரேஷ்குமார் சொல்லியுள்ளார். சமீபத்தில் எடுத்த ஸ்கேனில் லிவரின் நிலைமை நண்றாய் உல்ளது என்று சொல்லப்பட்டதன் மேல் அப்பாவுக்கு சந்தேகம் வந்துள்ளது. சரியாகத்தான் செய்தார்களா என்று தெரியவில்லை.
அனைவருக்கும் சொல்லிவிட்டேன். அக்காவும் வந்து பார்ப்பதற்கு புறப்பட்டுக்க் கொண்டிருக்கிறார். சென்னையிலிருந்து. "நீயும் அவசியம் வரும் சூழ்நிலைதான்". அப்பா இப்படிப் பேசுவது அச்சமூட்டூவதாக உள்ளது. சாதரணமாய் இப்படிப் பேசக்கூடிய ஆள் இல்லை அப்பா.
எப்படி ரியாக்ட் செய்வது என்று தெரியவில்லை. என்னால் என்ன செய்யமுடியும். என் கையில் எல்லோருடைய உயிரையும் பிடித்து வைக்கும் சக்தி இல்லை என்று எனக்கு மிக நன்றாக தெரியும்.என் கடமை என்னவோ அதை உடனடியாய் செய்வேன்.
டிக்கட்டுக்கு விசாரித்தில். 2 டிக்கட்கள் உள்ளது. ஒன்று பிரிட்டிஷ் ஏர்வேஸ். இன்னொன்று லுப்தான்சா. முதல் 2300 டாலர்கள். இரண்டாம், 1800 டாலர்கள். முதலில் செல்ல முடிவு செய்தேன். அதி சீக்கிரத்தில் போக வேண்டிய அவசியம் வந்துவிட்டால்? லுப்தானசா மறுநாள்.
பிரச்சினைகள் பல. இருப்பது டூப்பிளிகேட் பாஸ்போர்ட். ஸ்டாம்பிங்க் ஆகைவில்லை. லண்டனில் டிரன்சிட் விசா வாங்கவேண்டும். மணி 4 மாலை. இன்றுக்குள் செய்யமுடியாது. நாள செல்லவேண்டிய கட்டாயம்.
இன்னொரி இட்சத்தில் விசாரித்ததில் 1700 க்கு நார்த்த்வ்ஸ்ட் ஏர்லைன்சில் நாளை 5 மணிக்கே விமான்ப் புறப்படு. இன்று 4 மணிக்குள்
டிக்கட் வாங்கியாக வேண்டும். உடவே கிளம்பி வாஸ்ஹிங்க்டன் டி சிக்கு காரில் பயணம். பார்க்கிங் பிரச்சினை. 5 மணிக்குள் வாங்க வேண்டியதை 4.30 என்று ஆபிசில் சொல்லியிருந்தாங்கள். அதுவும் நல்லதுக்குத்தான்.
08-5-2004.
பத்தரை மணிக்கு 10 னிமிடம் முன்னாடி, போர்டிங் ஆயாச்சு. தேசி கும்பலில் உட்கார்ந்து பேச்சு கொடுக்க இன்றைக்கு ஏனோ பிடிக்கவில்லை. ஆம்ஸ்டெர்டாம், டேக் ஆப்பில் போட்டோ எடுக்க் நினைத்து விட்டுப் போச்சு. துக்கம்தான் காரணம். கூடவே தூக்கம். பிளைட் சாப்பாடு பிடிக்கவில்லை. இருந்தாலும் பசிக்குதே.
நெதர்லாந்து, முழுதும் மலைகளாகவேஉள்ளது. கண்ணுக்கு தெரிந்த வரையில் மலைகள். கண்ணுக்கு தெரியாத காட்சியிலும் தேடிப் பர்த்தால் மலைகளே. கிட்டத்தட்ட மூன்று மணினேரத்துக்கு கூடவே மலைகளும் வந்து கொண்டிருந்தன. சிவப்பு மண், கருப்பு மண், சாம்பல் மண், அழுக்கு கலந்த வெள்ளை மண் ஆகியவற்றை கடை பரப்பி விட்டாற் போல் எங்கும் மலைகள், சம வெளிகள். இடையிடையே, மலைகள் போனா போது என்று கொடுத்தது போல் சின்ன சின்ன நகரங்கள். சாலைகள் வளர்ந்த நாடுகளுக்கே உரிய கட்டுமானத்தில் சீராக காட்சி அளிக்கின்றன. வயல்களும் சீரான சதுரங்களில் உள்ளன. சில பெரிய ஆலைகளையும் பார்க்க முடிந்தது. மேல் கூரை அலுமினிய வண்ணத்தில் ஒரே மாதிரியாய் 200 கட்டிடங்கள் , பெரிய அளவுகளில்.
சமவெளிகளின் பரப்புகள் , மரங்களின் வேர்கள் பிரிந்து ஓடுவது போல் பல கோணங்களில் ஓடி யுள்ளது. பெரிய ஆறுகள் ஓடிக் காய்ந்திருக்கவேண்டும் போல் உள்ளது. ஓரிடத்தில் இரண்டு புறங்களிலும் மலைத்தொடர்கள். இடையில் பெரிய நதிப்பரப்பு . தண்ணீர் இல்லை. மிகச் சரியான இடைப்பகுதியில் ஒரு நகரம். இனி அந்த நதியில் தண்ணீர் ஜென்மத்துக்கும் வராது போல. மிகவும் சுவரஸ்யமான வடிவங்களில் குன்றுகள் தோன்றியுள்ளன. பெரும் கரு மலைகளும் கடுமையான தோற்றத்தை தந்தபடி உள்ளன.
08 04 2004
காலை 6.10 நெதெர்லாண்ட் , ஆம்ஸ்டெர்டாம் வந்து சேர்ந்தாச்சு. வாட்சில் இன்னும் 12.10 மணி. வண்டி கிளம்ப இன்னும் 4 மணினேரம். என்ன செய்வது? இங்கே இருப்பவனெல்லாம், ஆங்கிலத்தைத் தவிர வெறு ஏதோ மொழியில் பினாத்றானுங்க. அனேகமா டச்சு ந்னு நினைக்கிறேன். ஏன்னா அங்கங்கே டச்சு என்ற வாசகம் போர்டுகளில் உள்ளது.