<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener("load", function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <iframe src="http://www.blogger.com/navbar.g?targetBlogID=7029294&amp;blogName=KarthikRamas%3A+Nothing+but+Blogs&amp;publishMode=PUBLISH_MODE_BLOGSPOT&amp;navbarType=SILVER&amp;layoutType=CLASSIC&amp;searchRoot=http%3A%2F%2Fkarthikramas.blogspot.com%2Fsearch&amp;blogLocale=en_US&amp;homepageUrl=http%3A%2F%2Fkarthikramas.blogspot.com%2F" marginwidth="0" marginheight="0" scrolling="no" frameborder="0" height="30px" width="100%" id="navbar-iframe" allowtransparency="true" title="Blogger Navigation and Search"></iframe> <div></div>

KarthikRamas: Nothing but Blogs

வலைப்பதிவெல்லாம் சும்மா...

வலைப்பதிவெல்லாம் சும்மா என்று நிச்சயம் என்னால் சொல்ல முடியாது,இன்று யாராலும் சொல்ல முடியாது என்றே நினைக்கிறேன். வலைப்பதிவு தொடங்கிய காலத்தில் சற்றேறக் குறைய 50% எனக்கே இருந்த கருத்து வலைப்பதிவெல்லாம், பொழுது போக்குக்காக என்பது. இன்று கண்முன்னால் விரியும் பயன்களைப் பார்க்கும்போது, தமிழர் அனைவரும் ஒரே இடத்தில் கருத்துகளை பரிமாறிக் கொள்ளும் இடம் தமிழ்மணமாய் இருக்கக்கூடாதா என்ற பேராவல் எழமால் இல்லை. இதற்கு காரணம் அனைத்தையும் அனைவரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே.
வலைப்பதிவுகள்கள் சமீபத்தில் எனக்குணர்த்தியது, ஒருவர் நல்ல சிந்தனையின் திசையில் சிந்தித்து ஓரிரு வரிகள் எழுதினாலும், பின் தொடர்ந்தே வேறு சிலர் அதே திசையில் சிந்திப்பதற்கும், முன்னவர் விட்டுச்சென்ற இடத்திலிருந்து மேற்கொண்டு சிந்தித்து எழுதவும் இன்று முடிகிறது. இதை நான் வெகு காலத்திற்கு முன்னிருந்தே கணித்தேன் என்ற முறையில் சிறிய தற்புகழ்ச்சி ஒன்று மனதின் மூலையில் எட்டிப்பார்க்கிறது. இதை கருத்திற்கொண்டுதான் வெங்கட் முன்பொரு கூறியிருந்தபோது, சம ஆர்வமுடையவர்கள் சந்தித்திக்கொளும் பாலமாய் இவ்வலைப்பதிவுலகம் திகழும் என்றிருந்தேன். இதுபோன்ற ஒரு சந்திப்புக்கு முகாந்திரம் அமைத்துத்தந்த மதியை மனம் நினைத்துப்பார்க்கிறது. தமிழ் மொழி கணினி அளவிலே ஒரு முதிர்குழந்தை என்ற நிலையில் இருக்கும்போதே தமிழ் மணத்தை மிக வடிவாய் அமைத்துத்தந்த காசியும் அவரது ஈடுபாடும் கண்முன் வந்து செல்கிறது. அந்த வகையிலே தமிழில் லைனக்ஸ் என்று கங்கணம் கட்டிக்கொண்டு பாடுபடும் வெங்கட்டும்,தமிழா போன்ற எனக்கு தெரியாத இன்னும் எத்தனையோ பேரையும் ஒரு சாதரண தமிழ் கணினி பயனன் என்ற முறையிலே நன்றி சொல்லிக்கொள்ள கடமைப் பட்டிருக்கிறேன்.
நடந்திருக்கும் பேராபத்து மீண்டும் ஒருமுறை வராது என்று எதிர்ப்பார்ப்போம். இறை நம்பிக்கையுடையவர்கள் இறைவனை முழுமனதுடன் வேண்ட வேண்டிக்கொள்கிறேன். நடந்திருக்கும் பேரழிவு திடமான இறை நம்பிக்கை உடையவர்களைப் பார்த்து இறைமறுக்கும் சகோதரர்கள் ஓரிரு சொல் கடிந்து கொள்வதாய் அமைந்துவிட்டது. இருக்கும் நிலையினால் உந்தப்பட்ட கோபத்தினால் இறைநம்பிக்கையாளர்கள் திருப்பி இறைமறுப்புச் சகோதரர்களை கடிந்து கொள்வதிலும் எந்த ஆச்சரியமும் இல்லை. பிரச்சினையின் ஆழம் இதையெல்லாம் தாண்டி இவர்கள் எல்லோரையும் இணைத்துவைக்கிறது என்பதுதான் நடைமுறை. என்னளவிலே யோசித்துத் தெளிந்தது, இறைநம்பிக்கையின் திசையின் உச்சமும் , இறைமறுப்புக் கொள்கையின் உச்சமும் சந்தித்துகொள்ளும் ஒரு மேடையாய் நடந்த பேரிழப்பு அமைந்துவிட்டது எனபதும், அத்தகைய மெடையில் எழுந்த கேளிவிகள் , உதிறப்பட்ட வார்த்தைகளும் மிக் குறைந்த அள்வே என்பதுமாம்.
இந்த அழிவிலும் கூட உதவிகள் குவிந்த வண்ணம் இருந்தபோது கூட, நான் தனிப்பட்ட அளவிலே உணர்ந்துகொண்டது, ஏழை சமூகம் எத்த்னை அடிபட்டபோதும், நேரடி உதவியைத்தவிர அவர்களுக்கு நிரந்தரமாய் வாழ்வுப் பாதையை மாற்றி அமைத்துதரும் மனிதம் உலகில் ஏதும் இல்லை. இது செய்யப்படும் உதவிகளை ஏளப்படுதுவடில்லை என்று மட்டும் சொல்லிக்கொள்ள விருபுகிறேன். உதவியும் உதவி மனப்பான்மையும் எப்போது யாராலும் குறை சொல்ல முடியாத்து என்பதனாலேயே அவற்றின் சிறப்பும் கூடவே வந்து சேர்கிறது. என் மனதில் உறுத்துவதெல்லாம், மீன்டும் மீனவர்கள் , அழிவு முடிந்தது,வாழ்வு தொடர்கிறது என்று கடலுக்குள் செல்பர்கள்தான். தொடர்ந்து கடற்கரையிலிருந்து சொற்ப தூரத்தில் வசிக்கப் போகிறவர்கள்தான். இதற்கான காரணத்தை யோசிக்கும்போது, உள்ளூர் அரசியலிலிருந்து, ஏழை பணக்காரர்கள் என்ற பாகுபாடு உண்டாக்கிய எல்லா காரணங்களும், என் அமெரிக்க குடியிருப்பு வரை அனைத்தும் பட்டியலில் வந்து சேரும். ஒரு சாதாரண அல்லது சாதரணத்துக்கும் கீழே என்ற குடும்பத்திலிருந்து வந்த எனக்கு அவர்களது பிரச்சினையின் மூலங்கள், வாழ்வின் இயல் இயலாமை வகைகள் நன்கு புரிகின்றன. இங்கு நன்கு புரிகின்றது எனபது கூட சுனாமியின் இன்னல்களைப் பற்றி விளங்கிக்கொள்ள போதுமானதாய் இல்லை என்றே சொல்வேன். இதற்கு, என் தினசரி வாழ்வோட்டமும் , இருக்கும் இடம், சார்ந்துள்ள நன்பர்கள், இவர்களை காரணமாய்க் காட்டி ஏய்க்கும் என்மனம் ஆகியவையே காரணம். இருப்பினும் இது போல் நேர்மையாய் ஒரிரு வரிகள் எழுதமுடிகின்றது என்ற மட்டில் சந்தோடம். என் போலவே சூழ்நிலை யில் இருந்துகொண்டும் தம்மால் இயன்றவரை தாயகத்தின் கவலையில் பங்கெடுத்துக்கொள்ளும் நண்பர்கள் டீஜே,ஈழநாதன்,சுந்தரவடிவேல்,பிகேஎஸ்,ரோசாவசந்த்,பத்ரி,ராம்கி, ஆகியோர்களுக்கு என் நன்றிகள். இவர்கள் செய்வது நமக்குத் தெரிகிறது, வலையில் ஓரிடத்தில் சந்திப்பதால். இவர்கள் போலவே வலையில் சந்தித்தும் நமக்குத்தெரியாமல் உதவும் ஏனைய நண்பர்களுக்கும் என் நன்றிகள் இப்பெரும் உதவிகளுக்கு நன்றி சொல்லும் அதேவேளையில், மிகப் பெரிய சாவுக் கணக்குகள்தான்நம் நாட்டை பிறநாடுகள் திரும்பிப் பார்க்கவைக்குமா என்றும், சாவுக்கணக்குகள்தான் பண்க்காரனை ஏழைகளைத் திரும்பிப் பார்க்கவைக்குமா என்ற சமூக அமைப்பின் மீது அவநம்பிக்கையுடன் தொனிக்கும் கேள்வியும் எழாமல் இல்லை.
எழுதியவர்: KARTHIKRAMAS, | link | 4 comments |

சுனாமி மரணங்கள் 1 லட்சத்தைத் தாண்டும் அபாயம்!

எழுதியவர்: KARTHIKRAMAS, | link | 0 comments |

Dec. 27: Bodies of victims who were killed by tsunami waves lie in a mass burial pit in Cuddalore, India.
எழுதியவர்: KARTHIKRAMAS, | link | 0 comments |

Government workers pile bodies into a mass grave in Galle, Sri Lanka
எழுதியவர்: KARTHIKRAMAS, | link | 0 comments |

Describing the $20 million as a "line of credit," Ereli said, "We have identified an additional $20 million that we will be working to make available"

Describing the $20 million as a "line of credit," Ereli said, "We have identified an additional $20 million that we will be working to make available" to countries struck by the worst natural disaster in four decades.

The new total of $35 million is bound to be increased, he said. "We know the needs will grow," Ereli said. "The clear message is that we are committed to helping."

--FoxNews
எழுதியவர்: KARTHIKRAMAS, | link | 0 comments |

Releif Funds Links For Non Residents

எழுதியவர்: KARTHIKRAMAS, | link | 0 comments |

எட்செட்ரா எட்செட்ரா..

முன்பு போல் இப்பொழுதெல்லாம் ப்ளாக் பக்கம் தலைகாட்ட முடிவதில்லை. இதன் பின்னால் நிறைய விஷயங்கள் இருந்தாலும் ஷார்ட்டா சொல்றேன். எங்கள் க்ளையன்ட் ஒரு அம்மா, 50 வயதுக்கு மேல் இருக்கும். அந்த அம்மாவுக்கு ஒரு பாய் ப்ரெண்ட். அவரைப்பார்த்தால் ஒரு 35க்கு மேல் இருக்காது போல இருக்கு. ஒன்றரை வருடமாய் டேட்டிங். அவங்க எக்கேடு கெட்டா நமக்கென்னா என்று இருந்துடலாமுன்னா அங்கதான பிரச்சினையே ஆரம்பம். அந்த பாய் பிரன்ட் இதுக்கு முன்னாடி ஏதோ ப்ராஜக்ட் ட்ராக்கிங் (நேர கணக்கு பதியும் மென்பொருள்) செய்து கொண்டிருந்தாராம். அவரை அழைத்து அது போல் ஒன்று , எனக்கும் செய்து கொடு என்று , "கிடந்தது கிடக்கட்டும் கிழவியை தூக்கி மனையில் வை" எனபது போல , அவனுக்கும் சம்பளம் கொடுத்து அதை செய்ய சொல்லிவிட்டார் பெரிசு(அம்மா). (நாங்கள் அந்த அம்மாவை பெரிசு என்றுதான் அன்பாக(?!) அழைப்பது) பிரச்சினை என்னவென்றால், ஒரு வருடமாக் வரவேண்டிய ப்ராஜக்ட் ஒன்று இன்னும் இம்ப்ளிமென்ட் பண்ண முடியாமல் இருப்பதால், எங்களால் 8 மணி நேர கணக்கை அந்த டைம் ட்ராக்கரில் போடமுடிவதில்லை. அந்த அளவுக்கு வேலையும் இருப்பதில்லை.
அப்புறம் என்ன ப்ளாக் எழுதவேண்டியதுதான? 'ன்னு கேட்டு உயிரை வாங்காதீங்க.

ப்ராக்சி செர்வெர், செர்வெர் பேக் உப் என்று எல்லா எழவையும் அந்த பாய் பிரண்டு எடுத்துகொண்டுள்ளார். இப்பொழுதுநாங்கள் பார்க்கும் இணையப்பக்கங்கள் எல்லாவற்றையும் கண்காணிக்கிறனர் என்று எங்களுக்குப் படுகிறது. சும்மா ஒரு 1 மணி நேரம் கூட இணையப்பக்கம் வரமுடியாமல் இருக்கிறது. எதுக்கு எங்கள் மானத்ததையும் போக்கி , தமிழனின் மானத்தையும் போக்குவது என்று, கொஞ்சம் அடக்கி வாசிப்பது என்று முடிவு செய்துள்ளேன்.

இருந்தாலும் அதையும் மீறி, யாகூ மெயில் பார்ப்பதற்கு முன் , தமிழ்மணத்தை பார்த்துவிடுவது விரலுக்கு பழக்கமாப் போச்சு.அதனால்தான், ப்ளாக்கர் , ஹெல்லொ மென்பொருள் மூலமாக சில படங்களையாவது போடுவது என்று முடிவு செய்து போட்டுக்கொண்டிருந்தேன்.
- இது இவ்வாறிருக்க , நேற்று மிகவும் நம்ப முடியாத ஒன்று நடந்தது. எங்கள் மேஸ்திரி (மேனேஜர்) வேறு வேலையில் சேர்ந்துவிட்டதாக ஒரு குண்டை துக்கிப் போட்டார். நேற்றைக்கு முன் தினம் தான் கையில் போனஸை வாங்கிக் கொண்டு, மறுநாளே கொடுத்தார் பெரிய அல்வா.னேற்றைக்கு முன் தினம் நடந்த
கிருத்துமஸ் பார்ட்டியிலேயே எனக்கு அவ்வளவாக ஒட்டுதலில்லை, காண்ட்ராக்டர் என்பதினால் எங்களுக்கு போனஸும் கிடையாது (அதில் ஒன்றும் ஆச்சரியமில்லைதான்) கவனிப்பும் சரியாக இருக்கவில்லை. ஏற்கனவே, ஏதாவது காரணத்துக்காக வெள்ளையர்களை வெறுக்கும் என் மனது, ரேசிசம், காண்ட்ராக்ட் வேலை, எச்1 நிலை என்று எல்லாவற்றையும் கலவையாய் கட்டி ஒட்டு மொத்தமாக அந்த பார்ட்டியையே வெறுத்துவிட்டு வந்தது. இருந்தாலும் உணவில் வெறுப்பை காட்டக் கூடாது என்ற தெளிவு, ஒரு கத்தரிக்காய் பர்கரை முழுங்கியது.
வீட்டில் மடிக்கணினியில் விண்டோஸ் எக்ஸ்-பியை எடுத்துவிட்டு விண்டோஸ்2000 சர்வர் போட்டுள்ளேன். இன்னும் இன்டிக் சப்போர்ட் நிறுவவில்லை. வீட்டில் இருக்கும் நேரமும் குறைவு. என்னை மிகவும் எழுதத் தூண்டுவதாகிய ரோசாவின் விவாதம், அநாதையின் பதிவு போன்றவற்றிக்கு கூட போட்டுத்தாக்க முடிவதில்லை. பெயரிலி படங்காட்டியது போது மென்று எழுதுவரா தெரியவில்லை. வெங்கட்டின் பொய்கள் பதிவுக்கு கூட பதில் எழுத நினைத்திருந்தேன். முடியவில்லை.

கடைசியாக ஒரு வரி, எதைச் செய்யக்குடாதுஎன்று நினைத்தேனோ அதயே செய்துவிட்டேன். "ஏன் ப்ளாக் எழுதமுடியவில்லை என்று ஒரு ப்ளாக் போஸ்ட்" ...ம் ..ம்
எழுதியவர்: KARTHIKRAMAS, | link | 7 comments |

Long Time No See!!: From Veerappan
எழுதியவர்: KARTHIKRAMAS, | link | 0 comments |

அனாதையின் பதிவைக் குறித்து,

அனாதையின் பதிவைக் குறித்து,

அன்புள்ள அனாதை,
முதலில் பாராட்டு. "இது" போஸ்ட்.

மத்தபடி,
எனக்கு கேள்விகளாகவும் /தெரியாதவைகளாகவும் இருப்பதை எழுதுகிறேன்.

1. சங்கர மடத்தின் மீது பார்ப்பனர்களுக்கு இருக்கும் பார்வை என்ன? ஒரு சாதரண பார்ப்பன குடும்பம் சங்கர மடத்தை , ஏதோ மிக உயர்ந்த இடத்தில் இருக்கு பரிசுத்த இடமாக வைத்துள்ளது. சங்கர மடத்திலிருந்து அந்த சாதரண பார்ப்பன குடும்பத்துக்கு திரும்பி கிடைப்பது என்ன, கல்கண்டும் /குங்குமமுமா? போதுமா அது அவர்களுக்கு?
இவர்களுக்கு வெறு வழி தெரியாமல் அந்த "பரிசுத்த" டான்ஸ் காடும் சங்கர மடத்தை தலையிலே துக்கி வைத்துக்க் கொள்ள யார் சொன்னது?

2. சங்கர மடத்தின் தத்துவம் ஏன் எந்த பார்ப்பனராலும் கேள்வி கேட்கபடுவதில்லை?
கேள்விக்கு அப்பாற்பட்ட அல்லது தன்னல் புரிந்துகொள்ள்முடியாத தத்துவம் உள்ளதென ஏற்று கொள்ளும் எவரும், சஙர மடமல்ல எந்த மடமானாலும் இதே நிலையை எதிர் கொள்ள வேண்டியதுதான்.

3. ///(உண்மையில் இந்த பிரம்மச்சார்யத்திற்கான தேவை/அவசியம் நாலு வேதத்திலும் இருக்கின்றதா)?/
இல்லை. இதற்கு பார்பனர்கள் வணங்கும் புராணங்களிலே இருந்தே உதாரணம் காட்ட முடியும்.
ஆணாலும் ஏற்றுக் கொள்வதற்கு பார்பனர்களுக்கும், பார்ப்பனரல்லாதவர்க்கும் இயாத ஒன்று.
காரணம், கல்யாணம் ஆனவன் கீழானவன், கல்யாணமாகாதவன் உயர்ந்தவன் என்ற ஒரு மிகக் கீழ்த்தரமாண ஒரு முறைஅயை நமது கலாச்சாரத்தின் மீது ஏற்றப்பட்டுள்ளது.

அட அதையாவது இந்த பார்ப்பனர்கள் ஒழுங்காக பின்பற்றுகிறார்களா என்றால் அதுவும் இல்லை!
சங்கராச்சாரி சின்ன வீடு வைத்திருந்தால அது கூட வேதத்தில் சரி என்று தான் சொல்லப்பட்டிருக்கு என்று ஒரு எக்ஸப்ஷன் கொடுத்துவிடுவார்கள்.
சரி இப்ப பண்ண சங்ராச்சாரியை தீண்டத்தகாத முறையில் தள்ளி வையுங்கோ ந்னு சொன்னாலும் செய்வது துணிய மாட்டார்கள். இது அவர்கள் அறிவீனத்தை தவிர வேறெதையும் காட்டுவதை எனக்கு தெரியவில்லை. இங்கு பெரும்பாலான் சாதாரண் பார்ப்பனர்கள் அடிப்பொடிகளாகவும், தெரியாத குற்றத்தினாலுமேதான் இந்த நிலைக்கு தங்களை ஆளாக்கி கொள்கிறார்கள் என்பதும் யோசிக்கப்படவேன்டியது.
4. தற்சமயம், சங்ராச்சாரியை கெட்டவர் என்று சொல்லிவிட்டு, இவர்கள் மீண்டும் அதே அறீவீனத்தை மேலெடுத்துச் செல்ல ஆசைப்படுகிறார்கள். இவர்களால், தான் நடத்தி வந்தது வெத்து வேட்டு என்று தெரிந்ததும் விட முடியாமல் தவிக்கும் தவிப்பு. என்ன பாரம்பரியம் ! மண்ணாங்கட்டி பாரம்பரியம்! எத்த்னை பேர் இதில் சங்கரரை படித்திருப்பார்கள். (சங்கரர் மேல் அடிக்கப்பட்டுள்ள சாயம் வேறு உள்ளது என்பது வேறு விஷ்யம்)

5. இதில் பெரியார் பெயர் அடிபடுவதைப்போல ஒரு முரண்டாட்டத்தனம் ஏதுமில்லை! இது பெரியாருக்கு அவர்கள் செய்யும் இழுக்கு என்று சொன்னாலாவது சும்மா இருப்பார்களா என்று நினைக்க தோன்றுகிறது.
எழுதியவர்: KARTHIKRAMAS, | link | 0 comments |