<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener("load", function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <iframe src="http://www.blogger.com/navbar.g?targetBlogID=7029294&amp;blogName=KarthikRamas%3A+Nothing+but+Blogs&amp;publishMode=PUBLISH_MODE_BLOGSPOT&amp;navbarType=SILVER&amp;layoutType=CLASSIC&amp;searchRoot=http%3A%2F%2Fkarthikramas.blogspot.com%2Fsearch&amp;blogLocale=en_US&amp;homepageUrl=http%3A%2F%2Fkarthikramas.blogspot.com%2F" marginwidth="0" marginheight="0" scrolling="no" frameborder="0" height="30px" width="100%" id="navbar-iframe" allowtransparency="true" title="Blogger Navigation and Search"></iframe> <div></div>

KarthikRamas: Nothing but Blogs

தீண்டாமை நிமித்தம்...

நீ என் கடவுள் அல்ல
நீ எனக்கு கடவுளும் அல்ல!!
நீ அசிங்கமானவன்
நீ இருட்டறையில் வாழும் ஈனப்பிறவி

உன் மீது சதா
பழங்கள் அழுகிய,
பால் புளித்த வாடை

மனிதன் செய்வானா இப்படி?
நான் நிச்சயம் செய்யமாட்டேன்
உன்னை நான் தீண்டமாட்டேன்
என் நினைவிலும்

உனக்கு இந்தக் கதி எனில்
உன் பேர் சொல்லி உன்னைப்போற்றும்
உன் முன் வணங்கும் கடையர்களை
நான் ஏறெடுத்தும் பார்பதில்லை

புரியவில்லை,
இந்தத் தீண்டாமை என்னிடமிருந்து
அவர்களுக்கு உன் மூலமாய்
எப்படி வந்ததென்று?

-------------------------------------------::
தீண்டாமை நிமித்தம் கோவிலில் மறுக்கபட்டவர்களுக்கு சமர்ப்பணம்.
எழுதியவர்: KARTHIKRAMAS, | link | 2 comments |

'தோட்டியின் மகன்' -2

பக்கம் 40
---------
நிஜாரும் பனியனும் அணிந்து கொண்டு, கைக்குட்டை ஒன்றை கோணத்துக்கு கோணமாக் சுற்றிக்கொண்டு,வாளியும் மண்வெட்டியுமாக சந்தனத்தெரு வார்டில் வீடுகளுக்குப் பின்புறத்திலும், சந்து பொந்துகளிலும் ஒரு தோட்டியைப்பார்க்கலாம். அவன் பொடி மீசை வைத்திருக்கிறான். அவன் உடம்பு சற்று பருத்திருக்கிறது. அவனது பனியனும் நிஜாரும் துவைத்துக் கட்டியவை. முதல் பார்வையிலேயே அவன் சாதாரண தோட்டியல்ல என்று சொல்லிவிடமுடியும். தொழிலுக்குரிய உபகரணங்களை ஏந்திச் சென்றிராவிடில், அவன் தோட்டிதானா எனக்கூட சந்தேகம் தட்டிவிடும்.

அவன் ஏதோ முக்கியமான விஷயங்களைத்தான் சிந்தித்துக் கொண்டிருக்கிறான். சிந்திக்க வேண்டிய விஷயங்களிருக்கின்றன.அவன் பல்வேறு விஷயங்களைப்பார்த்து தெரிந்து மனதில் பதியவைத்துக் கொண்டிருக்கிறான். முன் தினம், குடி போதையில் நினைவில்லாமல் வீதியோரம் எங்காவது படுத்துறங்கிவிட்டு, காலையில் வேலைக்குவரும் தோட்டிகளில் ஒருவனல்ல அவன்.நேற்று அவன் சுத்தமாக குளித்தான்;உண்டான்;உறங்கினான். இன்றும் குளிப்பான்;உண்பான்;உறங்குவான்.

இன்னும் கூர்ந்து கவனித்தால், அவன் கண்களில் தோட்டியின் கோழைத்தனமும், தன்னையே அற்பமாக எண்ணிக்கொள்ளும் தாழந்த மனப்பான்மையும் இல்லாமலிருப்பதையும் தெரிந்து கொள்ளலாம். அவன் சில தீர்மானங்களுக்கு வந்து விட்டான்.அவசியமில்லாமல் அவன் யாருக்கும் தலை குனியமாட்டான்.

இப்படிப்பட்ட தோட்டியை நீங்கள் விரும்பமாட்டீர்கள். தினந்தோறும் குளிக்கும் தோட்டியை,முகச்சவரம் செய்துகொள்ளும் தோட்டியை,துவைத்துக்கட்டிய அல்லது சலவை செய்த வேட்டியையோ நிஜாரோ அணிந்து கொள்ளும் தோட்டியை நிச்சயம் நீங்கள் விரும்ப மாட்டீர்கள்.'அடேயப்பா, அவன் பெரிய இடத்து மாப்பிள்ளை மாதிரி அல்லவா போகிறான்!" என்று உங்கள் வீட்டு பெண்பிள்ளைகள் சொல்வார்கள்.அவன் பார்வையில் கக்கூசுக்கு போவதோ,கக்கூசிலிருந்து இறங்கி வருவதோ ஒரு பெண்ணுக்கு சாத்தியமான் காரியமல்ல. உங்கள் வீட்டுத் தோட்டி குடிகாரனாக இருக்க வேண்டும்;வாழ்க்கையில் அவனுக்கு எந்தவிதமான திட்டமோ, ஒழுங்கோ இருக்கக்கூடாது. என்று அவன் வழுக்கி விழுபவனாகவே இருக்க வேண்டும்; தவறு புரிபவனாகவே இருக்க வேண்டும்.

அந்தத் தோட்டி சுடலைமுத்துதான்.அவன் ஒழுங்காகத் தன் வேலைச்செய்வான். எல்லோருக்கும் அவன் மீது சந்தேகம்தான்.ஆனால் எல்லா வீட்டுக்காரர்களிடமும் அவன் கெளரவமாக நடந்தி கொள்வான்.பெரிய மனிதர்களைப் பார்த்து அவன் பல விஷயங்களை தெரிந்து கொண்டிருக்கிறான்.இவ்வாறு மிகவும் குறுகிய காலத்தில் அவன் வளர்ச்சியடைந்துவிட்டான்.வாழ்க்கையில் இன்னும் பல விஷ்யங்கள் அவன் தெரிந்து கொள்ளவேண்டியிருக்கிறது.

ஆனால் அவனுக்குத் தொல்லை தராத , அவனை அவமானப்படுத்தாத வீட்ட்க்காரர்கள் அந்த வார்டில் இல்லை.ஒரு முறை கனம் நீதி பதி அவர்களுக்கு அவன் ஒரு பிரச்சினையை உருவாக்கிவிட்டான்.அவர் வீட்டு கூரையில்லாத கக்கூசின் வெளிப்பக்கம் ஒரு துவாரம். சந்தில் நின்றுகொண்டே அந்த கக்கூசை சுத்தம் செய்யலாம். அந்த துவாரத்திலிருந்த கதவு இத்துப்போய்விட்டது.புதிய கதவு போடும் படி சொல்லியும் அவர் அதை மறந்துவிட்டார்.ஒரு நாள் மழைகொட்டிற்று. மறுநாள் சுடலை முத்துவுக்கு அந்தக் கக்கூசில் வேலையில்லை.சந்தைச் சுத்தப்படுத்துவது அவன் வேலையில்லை.யோரோ ஒருவரை தூண்டிவிட்டு புகார் கொடுக்கும் படி செய்தான் சுடலைமுத்து. அந்த வழக்கினால் ஏற்பட்ட அவமானம் இன்னும் ஜட்ஜ் அவர்களைவிட்டு நீங்கவில்லை.

பாருங்கள்! தோட்டி சுத்தமாக இருப்பது, இருக்க எண்ணுவது , புத்திசாலியாக இருப்பது எல்லாம் எத்தனை ஆபத்தான விஷயம்!இப்படிப்பட்ட தோட்டி இருக்கும் இடத்தில் குடியிருந்தால் உங்கள் மானம் மரியாதை எல்லாம் கப்பலேறிவிடாதா?
எழுதியவர்: KARTHIKRAMAS, | link | 2 comments |

~'தோட்டியின் மகன்' -1

சில நாட்களுக்கு முன் ரோசாவின் வலைப்பதிவில், தகழி சிவசங்கரப்பிள்ளையின் 'தோட்டியின் மகன்' என்ற நாவல் பற்றி பேச்சு எழுந்தது. கைவசம் நாவல் இருப்பதால் அதிலிருந்து சில பகுதிகளை இடுகிறேன் சொல்லியிருந்தேன்.நாவலை இன்னும் முழுமையாய் வாசித்து முடிக்கவில்லை. ஆனால் பாதி நாவலுக்குள்ளே எனக்கு முக்கியம்/ரசிக்கத்த்குந்தது என்று பட்ட சில் பகுதிகளை இங்கே இடுவேன்.

நாவல் விவரம்
-----------
பெயர் : தோட்டியின் மகன்.
மூலம் : தகழி சிவசங்கரப்பிள்ளை.
தமிழில் : சுந்தர ராமசாமி.
பதிப்பு: காலச்சுவடு (தமிழில்).
விலை : 75 இந்திய ரூபாய்கள்.

பக்கம் : 28
-------------

சுடலை முத்து அழுது கொண்டிருந்தான். பிச்சாண்டி அவனை தேற்ற முயன்று கொண்டிருந்தான்.எல்லோரும் இறப்பார்கள். கண்ணீர் சிந்திப்ப்யன் என்ன? கஷ்டப்ப்டாமல் செத்ததற்கு சந்தோஷப்படவேண்டும்.ஆனால் சுடலை முத்துவின் இதய வேதனை தணியவில்லை.ஒரு வயசிலிருந்து எத்த்னை சிரமப்பட்டு இசக்கிமுத்து அவனை வளர்த்தான்!அவன் வாழ்ந்ததே மகனுக்காகத்தானே! குடிக்கத் தண்ணீர் கூட இல்லாமல் போய்விட்டதால்தான், தன் அப்பன் இப்படி திடீரென்று போய் விட்டானோஎன்று சுடலைமுத்து எண்ணினான். அவன்தான் தகப்பனை கொன்றுவிட்டானோ.

எங்கே புதைக்கவேண்டும் என்பது பெரிய கேள்வியாயிற்று.பழனி மீண்டும் சுடலை முத்துவின் அபிப்ராயத்தைக் கேட்டான்.நிலைமையைப் பழனி தெளிவாகச் சொன்னான்.

" சுடுகாட்டிலேன்னா,அங்கே இருக்கிறவனுக்கு ஏதானும் கொடுக்கனும்.அப்புறம் தூக்குறவங்களுக்கு வயத்துக்காவதுபோடனும். எல்லாமா அஞ்சாறு ரூவா செலவளியும். அதுதான் கேட்டேன்."
சுப்பு கூறினான்.

"ஆமா, காசு இல்லாமே முடியுமா?"

ஒளசேப்புக்கு அப்போதும் பழைய அபிப்ராயம்தான்.

"மாதா கோயிலுக்கு போயிட்டா என்ன? பெட்டிதான் ஒன்னு வேணும். இப்போ இருக்கிற சாமியாரு நல்லவரு. நான்சொல்லுறேன். காசு இல்லேன்னாலும் காரியம் முடிஞ்சிரும்!"
அந்த யோசனையை யாருமே கவனிக்கவில்லை. சுடலை முத்து கணக்கு போட்டுப்பார்த்தான். ஆறு ரூபாய் வேண்டும். தன் யதார்த்த நிலையை சுடலைமுத்து தெரிவித்தான்.

"அது ஒன்னும் பிரமாதமில்லே. காலையிலே நீ வேலைக்குப் போ, ஆறு ரூவா சேந்திரும்" என்றான் சுப்பு.

சமீப காலத்தில் அவர்களிடையே நடந்த மூன்று அடக்கங்களை நினைவூட்டினான் சுப்பு. அந்தச் செலெவெல்லாம் எப்படி நடந்தது?வேலை செய்யும் வீடுகளுக்குச் சென்று சமாச்சாரத்தைச் சொல்லவேண்டும். சொன்னால் காரியம் நடந்துவிடும்.ஓரிரு தினங்கள் சவத்தைப் போட்டு வைக்கும்படி நேரலாம். அதனால் ஒன்றும் கெட்டுவிடாது. சம்பிரதாயப்படி செய்தோம் என்று திருப்தி ஏற்படுமல்லவா?
:
:
:
:

பிச்சாண்டி சுடலைமுத்துவை எழுப்பிவிட்டான். அவன் தன் தகப்பன் முகத்தை ஒருதடவை பார்த்தான்.தூங்குவது போல் கிடக்கிறான் இசக்கி முத்து. சுடலை முத்து வாழவேண்டும் என்று ஆசைப்படும் ஒருவர் இன்றுவரையிலும் இருந்தார். அவன் பயப்பட ஒருவர் இருந்தார். இனி அப்பா என அழைக்க அவனுக்கு யாருமில்லை.எல்லோருமாகச் சேர்ந்து சடலத்தை வெளியே கொண்டு வந்து குளிப்பாட்டினார்கள்.திரும்பி குடிசைக்குள் கொண்டு வந்தபோது கிழவன் சிரிப்பது போல் இருந்தது.பிணத்தை மூடுவதற்குத் துணி கிடையாது. பிச்சாண்டியும். சுப்புவும் போய்கொண்டுவந்தார்கள்.இதற்குள் வள்ளிநாயகமும்,சிவனாண்டியும் மண்வெட்டி சகிதம் "டிப்போ"வுக்குள் போனார்கள்.அப்பொதிலிருந்து "டிப்போ" நாய்கள் குரைக்கத்தொடங்கின.

இசக்கிமுத்துவுக்கு உரிமையான ஆறடி பூமியை அவனுக்கு வழங்க எல்லோரும் அவனித்தூக்கிக் கொண்டு சென்றார்கள்.

..தொடரும்
எழுதியவர்: KARTHIKRAMAS, | link | 2 comments |

இரண்டு தளங்கள் [ Free email, SMS ,Hosting services]

இரண்டு தளங்கள் [ Free email , SMS , Hosting services ]
1. இங்கு அமெரிக்கா முழுவதையும் வானத்திலிருந்து படமெடுத்துப்போட்டிருக்கிறார்கள். எல்லாபடத்தையும் ஒரு முறை பார்த்தா காசுகுடுக்காமலே முழு அமெரிக்காவையும் சுத்திப்பார்த்தா மாதிரி இருக்கும்.

http://www.skypic.com/

2. இங்கு இணையத்தில் இலவசமாய் கிடைக்கும், மின்னஞ்சல், செல்பேசி குறுஞ்செய்தி, டொமைன் நேம் சர்வீஸ் போன்றவை கிடைக்கும். உங்களுக்கு ஒரு வேளை உதவலாம்.

http://www.freemailguide.com/
எழுதியவர்: KARTHIKRAMAS, | link | 3 comments |

~டோணட்ஸ்,டிக்கட்டு,பயம்.

டோணட்ஸ்,டிக்கட்டு,பயம்.

1. நேற்று திரும்பிய இடமெல்லாம் அங்கிங்கெனாதபடி எங்கும் டோன்ட்ஸ். காலையில் காசியின் வலைப்பதிவில் பார்த்த டோனட்ஸ் மாலை 12 மணி வரை கூடவே துரத்தியது. ஒரு சாப்பாட்டு டப்பா வாஙக வால்-மார்ட்க்குப்போனா அதன் விளம்பர அட்டையில் டோனட்ஸ். அப்படியே முடிச்சு பில் போட கவுண்டருக்கு போனால் அங்கே பாதி விலையில் டோனட்ஸ். சரிதான் என்று ஒரு டப்பா வாங்கி வீட்டில் வைத்தேன். வெகு நேரம் இந்தியாவுக்கு தொலைபேசிவிட்டு பின்னர்தான் ஞாபகம் வந்தது சமைக்கவில்லை என்று. பிறகென்ன , ராச் சாப்பாடு, சீரியல்ஸும், டோனட்ஸும்தான்.
எனக்கு ஏற்பட்ட இந்த அனுபவம் நைட் ஷியாமளானுக்கு ஏற்பட்டிருந்தால் டோனட்ஸை வைத்து ஒரு பெரிய "ஏலியன் டோனட்ஸ்" படமே எடுத்திருப்பார்.


2. இது 13 நாளைக்கு முன்னால் நடந்தது. எக்ஸிட்-ஐ விட்டு அதிவேகச்சாலையில் சேருமிடத்தில் ரொம்ப மரியதையா ஒரு போலிஸ் காரர் வழி விட்டு இடம் கொடுத்தார். சரி, அவர் மனம் கோனக்கூடதே என்று முன்னால் போனேன். வந்துச்சுடா வினை! விளக்கை போட்டு ஓரம் கட்டு என்பது போல பின்னலேயே வந்தார். என்னை த்தாண்டி செல்ல ம்யல்கிறார் என்று பக்கத்து லேனுக்குப் போனேன் , அஙேயும் வந்தார், அடுத்து அடுத்த லேனுக்குப் போனேன், அங்கேயும் வந்தார், என்னைத்தான் பிடிக்கிறாறா என்று கன்பர்ம் செய்துகொண்டு, ஓரங்கட்டி நிறுத்தினால், பிடி டிக்கட்டை, உன் ரெஜிஸ்டெரேஷன் முடிந்து 3 மாதம் ஆயிற்று என்றார். ஊருக்கு போய் வந்ததில் கவனிக்கவில்லை என்று வழிந்தேன். 55 டாலர்கள் எள்ளு!

நமக்குத்தான் போலீஸ்காரார் பக்கத்துல்ல வந்தாலே உதறுமே! மனசுக்குள்ளேயே நான் ஒன்னும் தப்பஎல்லாம் பண்ணலையே என்று யோசித்துக்கொண்டே, "இன்னும் இன்ஸ்பெக்ஷன் பண்ணல. இந்த வாரத்துக்குளேயே பண்ணிடுவேன். பாருங்க, வைபர் ப்ளேடு எல்லாம் வாங்கி ரெடியா வைச்சிருக்கேன்" என்றேன். நான் பேசியதுக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்லை என்று அப்பறம்தான் தெரிந்தது. நல்ல வேளை அதுக்கு சேர்த்து இன்னொரு டிக்கட் கொடுக்காம விட்டானே புண்ணியாவான். நேத்து ஒருவழியா , மனி ஓர்டர் எடுத்து , தலையை மூணு முறை சுத்தி , போஸ்ட் பாக்ஸில் போடாச்சு டிக்கட்டை. எல்லாம், டிக்கட் கட்டலைன்னா கோர்ட்டுக்கு போகனுமேங்கற இன்னொரு ப்யம்தான் காரணம்.

3. இது தொடர்ந்து எந்த போலீஸ்காரருக்கு முன்னாலும் போவதில்லை என்று தீர்மானம் நிறைவேற்றியாச்சு, அதிலிருந்தே , நான் போகுமெல்லா சாலைகளிலும் போலீஸ்காரர்கள். அரண்டவனுக்கு எதைப்பார்த்தாலும் போலீஸ்.

4. வரி கட்ட ஆறுமுகசாமி வீட்டுக்கு போனால் , வாசலில் , இடிக்க வருவது மாதிரி ஒரு பெண் கார் ஓட்டிகிட்டு போறா. அவளைப்பார்த்து நான் பயப்பட, என்னைப்பார்த்து சிரித்துக்கொண்டே அவ பயப்பட , ஒரே பயம். டாக்ஸ் கட்டி முடிச்சு , I-95 க்குள் நுழைந்தால், ஒரு 1 அடி உயரத்தில் ஒரு பெருச்சாளி; அதை ஏத்திவிடக்குடாதே என்று சடாரென காரைத் திருப்பி, அதுக்கு பயந்து முடிச்சவுடனே , ஏன் நான் அதை ஏத்தவில்லை, இந்த மாதிரி இன்னும் வேகமாய் போகும் போது , இப்படி ஓட்டினால் என்ன ஆகும் என்று , இன்னொரு பயம். இருந்தாலும் இது சீரியசா எழுத வேண்டிய சப்ஜெக்டு.

எல்லாம் முடிச்சு காலையில் வலைப்பத்வெழுத உட்கார்ந்தா, வலைபதிவெழுதி, வேலை போனவர்கள் பற்றிய செய்தி. இது ஒன்னுத்துக்குதான் கொஞ்சம் குறைச்சலா பயந்தேன். :))
எழுதியவர்: KARTHIKRAMAS, | link | 4 comments |

ப்ளாக் எழுதுவதும் வேலை இழப்பதும் குறித்த செய்திகள்

1. கூகுளில் நடந்த கூத்து

Mark Jen, a blogger whose candid comments about life on the job at Google sparked controversy last month, has left the company.

2. மைக்ரோசாப்டிலும்

A Microsoft contractor lost his job last year after he took some pictures of Apple G5 computers being unloaded onto the software company's campus and posted them to his blog.

3.டெல்டா ஏர்லைன்ஸின் டீல் :

had been a flight attendant for Delta Air Lines for almost eight years when I started my blog, or online diary, in January of this year. I entitled it "Diary of a Flight Attendant."

On Saturday, Sept. 25, I came home to flashing messages on my answering machine.

"Ellen, I need you to call me back. It's about your trip tomorrow," repeated the urgent-sounding voice on the tape.

The voice was that of a Delta Air Lines in-flight supervisor. I immediately dialed the number on the messages, thinking perhaps my Rome flight the next day had been cancelled. What the supervisor told me, however, left me shocked and sick to my stomach.


"You won't be able to fly your trip tomorrow...it's about some
pictures on the Web."

The reason I started my blog in the first place was as a form of therapy.


------------------------------------------------------------------
இன்றைய காலையில் இதை எழுதி, இன்றைய மாலையே என் வேலை போனால் ,
இதுதான் விதி என்றோ ஐரணி Irony என்றோ சொல்லலாமா? :))


எழுதியவர்: KARTHIKRAMAS, | link | 8 comments |

~தேவதையை கண்டேன்.

இதுவரை இப்படி ஒரு கதை வரவில்லை என்றுதான் தோன்றுகிறது.

சைக்கிளில் டீ வினியோகம் செய்யும் பையன் (?) தணுஷ். அருகில் இருக்கும் காலேஜில் படிக்கும் பணக்காரப் பெண் கதாநாயகி. பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்தவுட காதலனின் பொருளாதர பிரச்சினைகளை யோசித்து காதலை விட்டுவிட்டு , பெற்றோர்கள் பார்த்த பயனை திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கிறாள். மனமுடைந்த கதாநாயகன் 2 3 முறை போலிஸ் ஸ்டேசனில், தன்னை த காதலி ஏமாற்றிவிட்டாள் என புகார் செய்ய முயன்று கடைசியாக , ஒருவழியாய் கோர்ட்டில் கேஸ் போடுகிறார். இப்படி காதலித்தவனை ஏமாற்றியது ஏன் என்று விசாரிக்கப்படுகிறார். சாட்சியங்கள் மற்றும் அறிவுரைகளின் பேரில் கதாநாயகனை கல்யாணம் செய்ய சம்மதிக்கிறார். தன் மீது வைத்த்ருக்கும் காதலை இன்னும் நன்றாக அப்போதுதான் புரிந்தும் கொள்கிறார். ஆனால் கடைசியில் கதாநயகன் , அவளை கல்யாணம் செய்துகொள்ள மறுக்கிறார், நீ எப்போது என்னை மறுத்தயோ அப்போதே என் காதல் செத்துவிட்டது. இது போல் பிறர் தவறு செய்ய கூடாது என்று தெரிந்து கொள்ளத்தான் கோர்ட்டில் வழக்கு தொடுத்தேன் என்கிறார்.

படம் எழுப்பும் கேள்வி இதுதான், காதலித்து ஏமாற்றுவதை குறித்து ஏன் சட்டம் எதுவும் இல்லை, காதலை சட்டம் கட்டுபடுத்த முடியுமா? காதலித்து ஏமாற்றப்படுபவனுக்கு/ளுக்கு சட்டம் உதவ முடியுமா? முதல் பாதியில் வரும் கடி ஜோக்குகளை/மசாலா கதையமைப்பு இவற்றை தவிர்த்து பார்த்தால் இப்படி சில கேள்விகளை முன்வைப்பதால் முக்கியமான படம் என்றே நினைக்கிறேன். இப்படத்தை பார்த்தால், காதல் பற்றிய நம் சமூகத்து நம்பிக்கைகளும் அயல் நாடுகளின் கலாச்சார பின்பற்றல்களும் ஞாபகம் வருகிறது . நம் சமூகத்து காதலர்களுக்கு நல்ல கேள்வியை எழுப்புகிறது. அதற்கும் மேலே, பாதி காதலில் காதலர் இருவரில் ஒருவர் தன் விருப்பத்தை மாற்றிக்கொண்டால் என்ன ஆகும்? அது சரியா என்பதும் யோசிக்கப்பட வேண்டியது. இதற்கு சட்டென்று ஒரு பதிலை சொல்லமுடியாது என்றே நினைக்கிறேன்.
எழுதியவர்: KARTHIKRAMAS, | link | 10 comments |

டெம்ப்ளேட் வேண்டுமா?

டெம்ப்ளேட் வேண்டுமா?
தமிழ் மணத்தில் ஓட்டு போடும் வசதி குறித்து உரையாடல்கள் தமிழ்மண மன்றத்தில் நடந்து கொண்டிருக்கிற்து. நானும் முயற்சி செய்து முழு வெற்றி பெற்றுவிட்டேன். கூடவே எனக்கு பிடித்த ஒரு டெம்ப்ளேட்டை மாற்றி இந்த வசதியையும் சேர்த்திக்கிறேன்.

இந்த பதிவுக்கான விஷயமே, ப்ளாக்ஸ்பாட்டில் என்னைபோன்று டெம்ப்ளேட்டுடன் ஒரே க்ளிக்கில்
ஓட்டு வசதியை செய்துகொள்ள ஆர்வமிருப்பவர்கள் எனக்கு மின்னஞலில் தெரிவித்தா என் மொத்த
டெம்ப்ளேட்டையும் இலவசமாய் (;-)) பெற்றுக் கொள்ளலாம். [என் மின்னஞ்சல் முகவரி karthikramas@gmail.com]

செய்முறை:

1. ப்ளாக்கர்.காம் -ல் நுழைந்து , டெம்ப்ளேட் என்ற சுட்டிய தட்டவும்
2. இப்போது டெம்ப்ளேட் நிரல் மொத்தத்தையும் செலெக்ட் செய்து கொள்ளவும்.
3. உங்கள் பழைய டெம்ப்ளேட்டு நிரலை எடுத்து ஒரு நோட்பேட்-ல் சேமிக்கவும்.[இதை அவசியம் எல்லோரும் செய்யவும்]
4. இப்போது மொத்தத்தையும் செலெக்ட் செய்து, டெலிட் செய்யவும் [ இதை செய்வதற்கு முன் எண் 2,3 அவசியம் செய்திருக்கவேண்டும் ]
5. சேவ் டெம்ப்ளேட் சேஞ்சஸ் -ஐ சொடுக்கவும்.
6. ரி -பப்ளிஷ் ப்ளாக் செய்யவும்.
7. ரி -பப்ளிஷ் என்டையர் ப்ளாக் செய்யவும்.

---
மறக்காம எனக்கு ஓட்டு போடவும். :-)
யாருக்குமே என் டெம்ப்ளேட்டு பிடிக்கலைன்னா, என் ரசனையில் எதோ கோளாறு என்று அர்த்தம். அவர்களுக்கு ஒட்டு போடும் வசதி பிச்சினை செய்ய கடவது !!!! :-)

எழுதியவர்: KARTHIKRAMAS, | link | 6 comments |