<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener("load", function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <iframe src="http://www.blogger.com/navbar.g?targetBlogID=7029294&amp;blogName=KarthikRamas%3A+Nothing+but+Blogs&amp;publishMode=PUBLISH_MODE_BLOGSPOT&amp;navbarType=SILVER&amp;layoutType=CLASSIC&amp;searchRoot=http%3A%2F%2Fkarthikramas.blogspot.com%2Fsearch&amp;blogLocale=en_US&amp;homepageUrl=http%3A%2F%2Fkarthikramas.blogspot.com%2F" marginwidth="0" marginheight="0" scrolling="no" frameborder="0" height="30px" width="100%" id="navbar-iframe" allowtransparency="true" title="Blogger Navigation and Search"></iframe> <div></div>

KarthikRamas: Nothing but Blogs

பெயரிலி; நதியும் வழியும் பற்றி. உங்கள் பின்னூட்டம் பின்னங்காலால் உதைக்கிறது.
உண்மையில் எல்லோருடைய பின்னூட்டமும் உதைக்கிறது. காசி உங்கள் தயவிலே ஏதாவது செய்யமுடியுமா? :)

இன்னும் பத்து நாட்களுக்கு இங்கோ எங்கோ இணயத்தில் பொழுதுபோக்க னேரமிருக்காது.
ஆனால் அவசியம் இந்தப்பதிவுக்கு பதில் எழுதுவேன். கருத்தாழமிக்கதாக உள்ளது. அதற்கு நன்றி. வந்து
நீர் சொன்ன நீலகண்டன் நிலையா என்று குதியாட்டம் போட்டுக்கொள்ளும் :)) நடையைச் சற்றுத் தளர்த்தியிருந்தால் நிறையப் பேரைச்சேரும் எனப்து மட்டும் வாசிப்பின் போது தெரிந்தது.

இந்தப்பதிவுக்கு எத்தனை தோழியர் பின்னூடம் இட்டுள்ளனர்;வாசித்து கருத்து சொன்னர் எனபதும் கருத்தில்
கொள்ளத்தக்கது :))
எழுதியவர்: KARTHIKRAMAS, | link | 1 comments |

~தோட்டியின் மகன்-3

பக்கம் -75 (அத்தியாயம் 4 -ன் துவக்கம்.)
-------------------------------------


அந்தக் கோடையின் பயங்கரம், அதற்கு முன் எப்போது இருந்ததில்லை. மழையைக்கண்டு மாதங்களாகிவிட்டன். அப்பப்பா என்ன உஷ்ணம்! பயிர் பச்சைகள் தீய்ந்து கரிந்தன. ஏதோ பயங்கரமான தொற்றுநோயின் ஆக்கிரமிப்புக்கு கட்டியம் கூறுவது போலிருந்தது அந்த காலநிலை.

கடைசியில் அது வந்தே விட்டது. வைசூரி.

வைசூரி என்றால், சாதாரண ரகத்தைச் சேர்ந்ததல்ல;அதி பயங்கரமானது. ஆறு அல்லது எட்டு நாட்களுக்குமேல் போவதில்லை. அப்புறம் சாவோலைதான். உயிரோடு கரையேறிவர்களே இல்லை என்று சொல்லிவிடலாம்.
மக்கள் பீதி அடைந்தார்கள். ஆனால் அந்த சமயத்திலும் ஊரில் கடை கண்ணிகளில் வியாபாரத்துக்கு ஒன்றும் குறைவில்லை.
அது நடந்து கொண்டுதானிருந்தது. தொழிற்சாலைகள் இயங்குகின்றன. தெருவெல்லாம் கூட்டம் மொய்க்கிறது.
முனிசிபாலிட்டி என்னென்ன நடவடிக்கைகள் எடுத்தது என்று எவருக்குமே புலப்படவில்லை. உருப்படியாக எதுவும் அது செய்ததாக
சொல்ல முடியாது.மக்கள் கேள்விக் குரல் எழுப்பினார்கள்.வைசூரிக்கு தடுப்பு ஊசி போடும் இளைஞர்கள் மட்டும் அங்கும் இங்குமாக த்ரிந்து கொண்டிருந்தார்கள்.அவ்வளவுதான். நகரத்தின் பக்கத்திலிருந்த குட்ட நாட்டிலும் சேர்த்தலைத் தாலுகாவின் சில் பகுதிகளிலும்
நோய் பரவ தொடங்கிற்று.

மொத்ததில் வியாதி அபயாகரமாக மாறிக்கொண்டிருந்தது. சினிமாக்கொட்டகைகளின் உரிமத்தை ரத்து செய்யப்போவதாகவும் பேசிக்கொண்டார்கள். இரவு னேரங்களில் எந்த விதமான கூட்டங்களோ, கொண்டாட்டட்ங்களோ கூடாது என்று தடுக்கப்போகிறார்களாம். சில தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுவிட்டன.

:
:
:
அவசரமாக சேர்மேன் தன் மனைவியையும் குழந்தைகளையும் திருவனந்தபுரத்திற்கு அனுப்பி வைத்தார்.
:
:
அவரை ரொம்பவும் தொல்லை படுத்திய பிரச்னை வேறு.கடற்கரையில் வசிக்கும் தோட்டிகளில் ஒன்று இரண்டு ஆட்கள் ஒவ்வொரு நாளும் குறைந்து கொண்டே வந்தனர். கேசவபிள்ளை அப்பொதைக்கு நிலைமையை எப்படியோ சமாளித்துக் கொண்டுவந்தார்.
ஆனால் இப்படியே நிலைமை நீடித்துக் கொண்டே போகுமானால் தோட்டிகளிடையே காலியாகும் இடத்தை நிரப்ப முடியாமால் ஆகிவிடும். சேர்மனும் ஓவர்சீயரும் தீவிரமாக சிந்திக்கத் தொடங்கினார்கள்.

"கடற்கரையில் மட்டுதானா இப்படி கேசவப்பிள்ளை?"

"இப்போதைக்கு அப்படித்தான். இந்தப் பக்கங்களில் ஒன்றும் இல்லை."

"இருந்தாலும், இனிமேல் பரவக்கூடது என்பதில்லையே. தொத்திக்கொண்டால் இந்த சனியன்கள் ஒன்று கூட மிஞ்சாது."

கேசவப்பிள்ளை அதை ஒப்புக்கொண்டார். இருபது ஆண்டுகளுக்கு முன் இப்படித்தான் ஒரு முறை ஏற்பட்டது. அன்று அசுத்தம்
பிடித்த இந்தச் சனியன்களை ஒன்றுகூட மிஞ்சவில்லை. பழைய கதையை அவர் சேர்மனுக்குக் கூறினார். பதினைந்து நாட்களில் நகரத்தில் தோட்டி என்ற வர்க்கமே பூண்டோடு அழிந்துவிட்டதாம்.

"அன்றி என்ன செய்தீர்கள் கேசவப்பிள்ளை?"

"எப்படியோ சமாளித்தேன். நினைத்தாலே ரொம்ப அதிசயமாக இருக்கும்.பணம் நிறைய செலவாச்சு."

"தோட்டி வேலை சுணங்கியிருக்குமே."

"அப்படி ஒன்னும் இல்லே;அதுக்கு நான் வச்சுகிடல்லே."

"எப்படி முடிந்தது"

"இந்த வியாதி ஆரம்பிதத்துமே, பணத்தை எடுத்துக்கிட்டு திருநெல்வேலிக்குப் போனேன். அங்கே கொஞ்சம் ஆட்களை ஏற்பாடு செய்துகொண்டு வந்தேன்.இங்கே திரும்பி வந்து ஒரு வாரத்திற்குள்ளே பழைய தோட்டி வர்க்கமே பூண்டோடு அழந்துவிட்டது".

சற்று நேரம் யோசித்துவிட்டு தலைவர் கேட்டார்.

"இந்தத் தடவையும் நாம் திருநெல்வேலிக்கு போக வேண்டுமோ?"


கேசவப்பிள்ளை சட்டென்று பதில் சொல்ல்வில்லை. சேர்மன் பேசினார்.

"முன்னதாகவே போ வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யலாமே. எல்லம் ஒரே குழப்பமாக முடிந்துவிடாமலிருக்கவேண்டும்.

"நானும் அதைத்தான் நினைச்சுட்டிருக்கேன்.சொல்லனுமுன்னு இருந்தேன்."

:
:
" இன்னும் ஒரு சமாசாரம்.கொஞ்ச நாளாகவே மனசுகுள்ளே வெச்சுருக்கேன் சொல்லாமல். பழைய தோட்டிகளையெல்லாம் கழுத்தைப்பிடிச்சுத் தள்ள வேண்டிய காலமும் வந்துவிட்டது. பத்து வருஷங்களுக்கு மேலே இவங்களை வெச்சுக்கக் கூடாது.
அது மட்டுமல்ல,காலமும் இப்பொ அப்படித்தானே இருக்கிறது. சங்கம் முடங்கிபோனப்பறமும் சங்கம் சங்கமுன்னு பொலம்பிக்கிட்டுதானிருக்கா. இனிமேலும் சங்கம் ஏற்படக்கூடும்.இவங்களை வெச்சு வேலை வாங்குவது சிரமம்தான். இது நல்ல சந்த்ர்ப்பம்."

கேசவப்பிள்ளையின் கடைசி வார்த்தையின் பொருள் பிடி படவில்லை சேர்மனுக்கு.

"எதற்கு நல்ல சந்தர்ப்பம்?"

"இல்ல. வேலையிலிருந்து நாமாக விலக்கிவிட்டதாக ஏற்படாதல்லவா?"

"தானாக செத்து தொலையட்டும் என்று சொல்லுகிறீர். அப்படித்தானே? பேஷ்!."
எழுதியவர்: KARTHIKRAMAS, | link | 3 comments |

மதி இன்று ஓட்டு கேட்டிருக்கும் விஷயம் முக்கியமானது.

மதி இன்று ஓட்டு கேட்டிருக்கும் விஷயம் முக்கியமானது. இது firefox- ல் தமிழ் ஒழுங்காய்த் தெரிய , இந்த பிரச்சினையை -firefox - செய்பவர்களுக்கு முன்னெடுத்துச்செல்ல கோரும் நடவடிக்கை.

சுட்டி, தகவல் பற்றிய குழப்பங்களை தவிர்க்க இந்தப் பதிவு.

1. இங்கே செல்லவும். உங்கள் இ-மெயில் ஐடி-ஐ கொடுத்து ஒரு கணக்கு தொடங்கவும்

https://bugzilla.mozilla.org/createaccount.cgi

2. உங்கள் இ-மெயிலை திறக்கவும். உங்களுக்கு ஒரு பாஸ்வேர்ட் அனுப்பபெறும்.


3. அதைக்கொண்டு, இங்கு சென்று வாக்களிக்கவும்.

https://bugzilla.mozilla.org/votes.cgi?action=show_user&bug_id=270012

4. காலரை தூக்கி விட்டுக்கொள்ளவும்.

நன்றி.
எழுதியவர்: KARTHIKRAMAS, | link | 10 comments |

சுரணையற்ற சுரா..

நன்றி பாலாஜி,

கதையை வாசித்தேன்.

ரூமியின் கேள்வியில் அர்த்தம் உள்ளது.
கதையில் விவரணை , சமூகம் இப்படி [கேவலமாய்]இருந்தது எனபதற்கான வரிகள் விரவியே உள்ளன. ஆனாலும், தாயம்மா தலித் பெண் எனபது வெளிப்படையாய் சொல்லப்பட்டிருக்கிறது.

சுரா, சுரணையற்று எழுதியுள்ளதாய் நான் நினைப்பது. அத்தனை படிப்பறிவும் பெற்ற ஒருவள், ஒரு சிறுவனிடம் அவ்வாறு நடந்து கொள்வாளா? என்பதுதான் சுத்தப்பேத்தல்.

அவள் தலித் எனபதால் அவ்வாறு செய்யக்கூடயவளாக இருக்ககூடாதா? என்று யாராவது வாதாடலாம். செய்யகூடியவள் என்பதை சொல்வதற்கு தலித் அடையாளம் தேவையா? இது தான் என் கேள்வி.

இதை மிக நேர்த்தியாய் நெய்திருக்கிறார் சுரா. இதற்கு என்ன அவசியம்?

இதையே மாற்றி, ஒரு மேல்ஜாதி, அல்லது பிராமணப் பெண் ஆசிரியை
ஒரு தலித் பையனை, பாலியல் பலாத்காரம் செய்ததாய் எழுத முடியுமா?
அப்படி செய்தாலும் அதற்கு விளைவு, அவளை ஊரைவிட்டு தலித்துகள்
துரத்துவதாய் எழுத குறைந்தபட்ச சாத்தியக்கூறுகளாவது உள்ளதா?
உயர் ஜாதி மானம் உயர்ந்த மானம்! தலித்துக்கு மானம் இல்லையா?
எழுதியவர்: KARTHIKRAMAS, | link | 61 comments |