வெள்ளையர்கள் காட்டுமிராண்டிகள்?
நேற்று பி.பி.எஸ் -ல் பார்த்துக்கொண்டிருந்த இந்த செய்தி சற்று ஆச்சரியத்தை அளித்தது. ஐரோப்பியர்கள் சப்பானுக்கு வரும் முன்னரே, சப்பானியரின் கலாச்சாரம் வெகுவாக வளர்ந்திருந்ததாகவும், சப்பானியர்கள் ஐரோப்பியர்களை "காட்டுமிராண்டிகள்" என்ற சொல்லுக்கு இணையாக பார்பேரியன்ஸ் என்று அழைத்துள்ளார்களாம். அவர்களை , நீள முக்குகளுடன் கேலிச்சித்திரங்களில் வரைந்தார்களாம். காரணம் அப்போதே சப்பனியர்கள் தினமும் குளிக்கும் பழக்கம் உள்ளவர்களாம். வெள்ளை ஐரோப்பியர்கள் மாதக்கணக்கில் குளிக்கமாட்டார்களாம்.
சப்பானியர்கள் அப்போதே குச்சிகளுடன் உணவு உட்கொள்வார்களாம். வெள்ளையர்கள் கைகளால் உண்பார்களாம்.

(photo courtesy www. kyohaku . go . jp)
1543 -ல் முதன்முதலில் போர்த்துகீசியர்கள் சப்பானில் கால் பதித்தனர். அதற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக ஐரோப்பியர்கள் பல்வேறு காரணங்களுக்காக வந்தனராம். முக்கியமாக கிருத்தவ மிஷ்ஷனரிகள் அங்கு கால்பதித்தனவாம்.
சப்பானியர்கள் , தாளில் மேலிருந்து கீழாக எழுதும் பழக்கமுடையவர்கள். ஒரு வெள்ளைகாரர் ஏன் அவ்வாறு எழுதுகிறீர்கள் என்று ஆச்சர்யோத்தோடு கேட்க , அந்த சப்பானியன், "நீங்கள் ஏன் இடமிருந்து வலமாய் எழுதுகிறீர்கள்? என்று ஒரு போடு போட்டிருக்கிறார். மேலும், உடம்பில் தலை மேலே உள்ளது, கால் கீழே உள்ளது என்வே மேலிருந்து கீழே பார்ப்பது முறையானது என்ற ஒரு விளக்கும் அளித்தாராம்.
இதைத்தேடியபோது அகப்பட்ட சுட்டிகள் இவை.
http://www.kyohaku.go.jp/eng/dictio/data/shikki/nanban.htm
"Japanese people called the Europeans nanban, literally Barbarians from the South, because the Portuguese ships appeared to sail from the South."
http://www.answers.com/topic/barbarian

பிஹைண்ட் த எனிமி லைன்ஸ்.
பிஹைண்ட் த எனிமி லைன்ஸ்.
==========================

1995 ஆம் வருடம் நடந்த ஸ்காட் ஒ க்ராடி (Scott O Grady) -யின் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட போஸ்னிய சம்பவத்தின் அடிப்படையில் இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
க்ரிஸ் பர்னெட் தான் கதாநாயகன்(ஓவன் வில்ஸன்), சுருக்கமாக பர்னெட். போஸ்னிய பகுதியின் நேடோ (NATO) கட்டளைக்கு உட்பட்ட அமெரிக்க கடற்படையின் விமான வழிகாட்டிதான் பர்னெட். அவனது விமான ஓட்டி ஸ்டாக் அவுஸ். முன்னாள் போர்க்கதாநாயகன், இன்னாள் தளபதி லெஸ்லி(ஜீன் ஹாக்மேன்) -யின் கீழ் பணிபுரிகின்றனர். ஏழு ஆண்டுகளாக ரோந்து விமான ஓட்டுதலில் வாழ்வு சுவாரஸ்யமில்லை என்று சொல்லும் பர்னெட் தனது ராஜினாவாவை தெரிவிக்கிறான். இரண்டுவாரங்களுக்கு பிறகு
ராஜினாமாவை அவசியப்பட்டால் எற்றுக்கொள்வதாக சொல்கிறார் அவனது தளபதி.

இந்த இரண்டுவாரங்களுக்கு இடையில்தான் கதை. ரோந்து செல்லும் பர்னெட்டும் ஸ்டாக் அவுஸ¤ம் , அனுமதிக்கப்பட்ட எல்லையைத் தாண்டி போஸ்னியப்பகுதியில் ராடாரில் சமிக்ஞை வருவதால் அந்த பகுதிக்கு சென்று பார்க்க முற்படுகின்றனர். பிரச்சினைக்குரிய பகுதிகளை விமாத்திலிருந்து ஒளிப்படம் எடுக்கின்றனர்.இதை போஸ்னியத் தீவிரவாதிகள் நேடோவின் விமானம் குண்டு போட வந்துள்ளது என்று நினைத்து ஏவுகணையால் சுட்டு வீழ்த்துகின்றனர். இந்த ஏவுகணையால் துரத்தப்படும் விமானக்காட்சி மிக அருமையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்டாக் அவுஸை கொல்கின்றனர் தீவிரவாதிகள் போஸ்னிய கலகககாரர்கள் உத்தரவின் பேரில். அவர்கள் தீவிரவாதிகளா இல்லை போஸ்னிய ராணுவமா என்ற குழப்பத்தை பர்னெட் தனது தளபதி லெஸ்லிக்கு தெரிவிக்கிறான். தீவிரவாதிகள் அவனை துரத்துகின்றனர். பர்னெட் எப்படி அவர்களிடமிருந்து காப்பாற்றப்படுகிறான் என்பதுதான் மிச்சத் திரைப்படம்.
இதற்கிடையில், போஸ்னியாவிற்கு சென்று பர்னெட்டை காப்பாற்ற முயற்சி செய்கிறார் அவனது தளபதி லெஸ்லி. விமானத்தை சுட்டது போஸ்னிய அரசு இல்லை என்று தெரிந்து கொண்ட நேடோ உயர்தளபதி பிக்கெட் இம்முயற்சியை தடுக்கிறார். இம்முயற்சியொரு குறும்போரை உருவாக்கலாம் என்றும் அது அமைதிப்பேச்சு வார்த்தைகளை குலைக்கும் என்றும் சொல்கிறார். ஒரு உயிரைக் காக்க பல ஆயிரம் உயிர்கள் பலியாகும் சூழல் உருவாகலாம் என்று எச்சரிக்கிறார்.கையைப்பிசைந்து கொண்டு , பர்னெட்டுக்கு தப்பி ஓட மட்டும் யோசனைகளைச் சொல்வதுடன் நின்று கொள்கிறார் பர்னெட்டின் தளபதி. அமெரிக்க கடற்படை தளபதிக்கும் நேடோவின் உயர்தளபதி பிக்கெட்-க்கும் நடக்கும் உரையாடல்கள் மிகச் சூடானவை. கொஞ்சம் "க்ரிம்சன் டைட்" -ஐ ஞாபகப்படுத்துகிறது.
ஒரு கட்டத்தில் போஸ்னியாவில் தீவிரவாதிகளின்/கலகக்காரர்களின் கட்டுக்குள் இருக்கும் பகுதிகளில் சிக்கிக்கொள்ளும் பர்னெட் தப்புவதற்காக தனது ராணுவ சீருடையை மாற்றிக்கொள்கிறான். அவன் சீருடையில் ஒருவரை காட்டி பர்னெட் இறந்துவிட்டான் என்று தொலைக்காட்சியில் சொல்கிறது போஸ்னியா. இதனால் அவனைக் காப்பாற்றும் இரண்டாம் முயற்சியும் தோல்வி அடைகிறது. கடைசியாய் லெஸ்லி தனது வேலையிழந்தாலும் பரவாயில்லை என்று முடிவெடுத்து, நேடோ தளபதி பிக்கெட்-ஐ மீறி பர்னெட்டை காப்பாற்ற புறப்படுகிறார்.
ஓவன் வில்சனின் நடிப்பும் ஜீன் -ஹாக் மேனின் நடிப்பும் மிக அருமை. பிக்கெட்டையும் குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும். கடைசியில் தான் எதற்காக அத்து மீறி பறந்தேன் என்பதை நிரூபிக்க , போஸ்னியாவில் சுட்டுக்கொல்லப்பட்ட மக்களின் சடலங்களை பற்றிய ஒளிப்படங்களுடன் வந்து சேர்கிறான் பர்னெட். அங்கு ஒரு சிறிய யுத்தமே நடந்து முடிகிறது.
குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய காட்சிகளாக, போஸ்னியா கலகக்காரர்கள் விமானத்தை ஏவுகணைத் தாக்குதலுக்கு உட்படுத்தும்போது பர்னெட்,ஸ்டாக் அவுஸ் தப்பிக்கும் காட்சி.
லெஸ்லிக்கும், பிக்கெட்டுக்கு இடையே யான முடிவெடுக்கும் விவகாரம் குறித்த காட்சிகள், பர்னெட் சடலங்களுக்கு அடியில் மறைந்து போஸ்னிய கலகக்காரர்களிடமிருந்து தப்பும் காட்சி
என்று பல காட்சிகளை சொல்லலாம். கடைசி உச்சகட்ட போர் நம்மை இருக்கையின் முன்னே வரச்செய்கிறது.
ஒளிப்பதிவு வெகு அழகாக செய்யப்பட்ட , உணர்ச்சி பூர்வமான வசனங்களுடன் மிகுந்த சிக்கலான சம்பவத்தைக்கொண்டு அருமையாக செய்யப்பட்ட படம். சமீபத்தில் பார்த்த படங்களில் பார்க்கவேண்டிய படம் என்று சொல்லக்கூடிய ஒரு படம், அதன் காட்சிகளுக்காகவும், கதை நகர்வுக்காகவும்.
(Photos courtesy: Splicedonline . com)