அயோத்தி தாசர் !!!!
[அயோத்தி தாசரின் இந்தக் கட்டுரைக்கு போதிய விளம்பரம் இல்லாததால். இதை பதிவர் ராகவன் தம்பி பதிவிலிருந்து இங்கு மீள் பிரசுரம் செய்கிறேன். அவருடைய பதிவில் தமிழ் சரியாகத் தெரியவில்லை.]
நன்றி.
ொண்டை மண்டல வல்ல காளத்தி தெய்வப்புலமை. வைத்திய சிம்ஹம். சங்கை கவிராஜ பண்டிட் க.அயோத்தி தாஸ தம்ம நாயகர் - ஸ்ரீலஸ்ரீ அயோத்தி தாச பண்டிதர் வாழ்ந்த காலம் 1845 லிருந்து 1914 வரை.
நீலகிரியை சோந்த அயோத்தி தாசர் பிறப்பால் ஆதி திராவிட வகுப்பை சேர்ந்தவர். தமிழகத்தின் அரசியல் அரசியல் சரித்திரத்தில் மிக நீண்ட காலம், அதாவது சுமார் எண்பது ஆண்டுகளுக்கு மேலாக இருட்டடிப்பு செய்யப்பட்ட ஒரு மாபெரும் மனிதர் அயோத்திதாசர் என்று சொன்னால் அது மிகையான வார்த்தையாக இருக்காது.
தமிழ்ச் சூழலில் இவை போன்ற காரியஙகள் துரதிருஷ்டவசமாக அதிர்ச்சி தரும் காரியமாக அமைவதில்லை. சமத்துவம். பகுத்தறிவு. நவீனத்துவம் முதலான கொள்கைப் போக்குகளில் தமிழக அளவில் பெரியாருக்கும் தேசிய அளவில் அம்பேத்கருக்கும் முன்னோடியாக விளங்கியவர் அயோத்தி தாசர். இலக்கிய சமூக சமய வரலாற்று ஆய்வுகளின் அடிப்படையில் புதிய சமுதாயம் படைக்கும் பணியில் தம்மை முழுதுமாக அர்ப்பணித்துச் செயல்பட்டவர். ஆதி திராவிடர்களை அரசியல் பேசவைத்தவர்.
ஏற்கனவே சொன்னதுபோல, சுமார் ஒரு எண்பது ண்டு காலம் பகுத்தறிவுச் செம்மல்கள், சமூகநீதிப் போராளிகளான திராவிட இயக்க மாமன்னர்களின் பார்வையில் கூட அவர்கள் தங்களுடையதாக எடுத்தாளும் பல கருத்தாக்கங்களின் முன்னோடியான அயோத்தி தாசர் அகப்படும் பாக்கியம் செய்திருக்கவில்லை என்பது மிகவும் துரதிருஷ்டவசமான விஷயம். இதற்கான காரணங்களை வரலாறு என்றாவது ஒரு நாள் இவர்களுக்கும் தமிழ்ச் சமூகத்துக்கும் முன் எடுத்து வைக்கும்.
சமூக நீரோட்டத்தில் கவிதை, கதை, கட்டுரைகள், நாடகங்கள் போன்றவற்றில் ஆதி திராவிடர்கள் அக்காலத்தில் மிக அருமையானதொரு பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். ஆனால் மிகவும் துரதிருஷ்டவசமாக 1860லிருந்து 1910 வரை சுமார் 50 ண்டுகள் ஆதி திராவிடர்களால் படைக்கப்பட்ட இந்த கவிதை, கதை, கட்டுரைகள், நாடகங்கள் எங்கும் கிடைக்காமல் போனதால் அவர்களது வரலாற்றையும் அயோத்தி தாசர் போன்ற ஆகிருதிகளின் வரலாற்றையும் விரிவாகத் தெரிந்து கொள்ள அரிதாகிப்போனது. அயோத்தி தாசர் பரவலாக தலித்துகள் இடையிலும் பேசப்படாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.
ஆதி திராவிடன். மகாவிகடதூதன். பூலோக வியாசன். பறையன். ஆதி திராவிட மித்திரன் போன்ற பத்திரிகைகள் அக்காலகட்டத்திய தலித்துகளால் கொண்டுவரப்பட்டவை. இந்தப் பத்திரிகைகள் எதுவும் பின்னாளில் ஆய்வாளர்களுக்குக் கிடைக்கவில்லை. இவை கிடைத்திருந்தால் அக்காலத்திய ஆதி திராவிடர்களின் போராட்டங்கள் மற்றும் அயோத்தி தாசரைப் பற்றிய முழு விபரங்கள் கிடைத்திருக்கும்.
இந்நிலையில் அயோத்திதாசரை இருபதாம் நுற்றாண்டின் இறுதியில் கண்டெடுத்த பெருமை - இன்னும் சொல்லப்போனால் தமிழகத்தின் தலித்துக்கள் இடையே அயோத்தி தாசரை மறுபிறப்பு எடுக்க வைத்த பெருமை ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ய்வு மாணவராக இருந்த தோழர் ஞான.அலாய்சியஸை சேரவேண்டும். அயோத்திதாசரின் எழுத்துப் பணிகளுக்கு சாகாவரம் அளித்து இருக்கிறார் அலாய்சியஸ் என்று சொன்னால் மிகையாகாது.
அயோத்தி தாசரைப் பற்றி நமக்கு மிக அதிக அளவில் கிடைக்கும் பதிவுகள் என்பவை அவர் 1907 லிருந்து 1914 அதாவது அவருடைய இறப்பு வரை சிரியராக இருந்து வெளியிட்ட ஓரணாத் தமிழன் என்னும் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகளின் வாயிலாகத்தான். அயோத்தி தாசரின் இறப்புக்குப் பிறகு அவருடைய மகன் க.அ.பட்டாபிராமன் 1922 வரை தமிழன் இதழ்களை நடத்தியிருக்கிறார்.
மிகுந்த சிரமத்தின் பேரில் இக்கட்டுரைகளை ஓரிடத்தில் தொகுத்து அயோத்தி தாசர் சிந்தனைகள் என்னும் தலைப்பில் இரு தொகுதிகளாக வெளியிட்ட அரும்பணியை செய்தவர் ஞான அலாய்சியஸ். இவருடைய இந்த அற்புதப் பணிக்கு ஊக்கமளித்து பெரும் செலவில் அயோத்தி தாசர் சிந்தனையின் இரு தொகுதிகளையும் வெளியிட்டவர்கள் நாட்டார் வழக்காற்றியல் மையம், தூய சவேரியார் கல்லுரி, பாளையங்கோட்டை. பின்னர் தலித் சாகித்ய அகாடமியால் அயோத்தி தாசர் சிந்தனைகள் மூன்றாம் பகுதி வெளியிடப்பட்டது.
ஞான அலாய்சியசுக்கும் பாளையங்கோட்டை நாட்டார் வழக்காற்றியல் மையத்துக்கும் தமிழ்ச் சமூகம் மிகப்பெரிய அளவில் கடமைப்பட்டுள்ளது.ஞான அலாய்சியசுக்கு தமிழன் இதழ்களை தந்து உதவியவர் தோழர் அன்பு பொன்னோவியம். அவர் தன்னுடைய முன்னுரையில் குறிப்பிடுகிறார் -தமிழகத்தின் புதைக்கப்பட்ட களஞ்சியமாகக் கிடந்த இது, நான் எண்ணிப் பார்க்க முடியாத அளவில் பல நுறு பக்கங்களைக் கொண்ட இரு தொகுதிகளாக வெளியாவதை தமிழன் பத்திரிகையின் மறு பிறப்பாக எண்ணி மகிழ்கிறேன். இது தமிழினத்திற்கே கூட அதிர்ச்சியுடன் வியப்பூட்டும் நிகழ்வாகத் தெரியக்கூடும் என்று கருதுகிறேன்...
என்று கூறுகிறார். இருந்தும் இந்த இரு தொகுதிகளிலும் கூட எங்கும் அயோத்தி தாசரின் இளமைப் பருவம். கல்வி குறித்த பதிவுகள் எங்கும் கிடைக்கவில்லை. சமூகம். தாழ்த்தப்பட்டோருக்கான உரிமைகள் குறித்த சிந்தனைப் பதிவுகள். பெளத்த மதப் பிரச்சாரம் போன்றவற்றுக்கே வாழ்க்கையை அதிகமாக அர்ப்பணித்த அயோத்தி தாசர் தன்னைப் பற்றிய குறிப்பைக்கூட எங்கும் பதிவு செய்யவில்லை. ஓரிடத்தில் அவருடைய முன்னோர்களைப் பற்றி வருகிறது. இதுவும் நம் தமிழ் இலக்கிய சரித்திரம் குறித்த ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்து கொள்ளும் விதமாக இருக்கிறது.
பிரான்சிஸ் வைட் எல்லிஸ் என்னும் துரை 1796ல் சென்னை வருகிறார். இவர் திருக்குறள் மீது ஆங்கிலத்தில் உரையும் விமர்சனக் கட்டுரையும் எழுதியிருக்கிறார். தமிழ் இலக்கியச் சுவடிகளை சேகரிப்பதில் தன் வாழ்நாளை அதிகம் செலவழித்தவர் இந்த எல்லிஸ் துரை. இவரைப்பற்றி மீனாட்சி சுந்தரம்பிள்ளை தன்னுடைய கட்டுரை ஒன்றில் மிகவும் சிலாக்கியமாக சொல்லியிருப்பார். இந்த எல்லிஸ் துரையின் நண்பர் ரிங்டன் துரையிடம் பட்லராக வேலை பார்த்தவர் கந்தப்பன். இவர் அயோத்தி தாசரின் பாட்டனார். இந்தக் கந்தப்பன், திருக்குறள், நாலடி நானுறு போன்ற சில ஓலைச் சுவடிகளை எல்லிஸ் துரை வசம் ஒப்படைத்திருக்கிறார். அப்போது சில பிராமணர்கள் துரையிடம் சென்று கந்தப்பன் தீண்டத்தகாத வகுப்பில் பிறந்தவன் என்றும் அவன் கூறுவதையும் அவன் கொடுப்பதைப் பற்றி அதிகம் பொருட்படுத்தத் தேவையில்லை என்றும் அறிவுரை கூறியிருக்கின்றனர். அவற்றைப் பொருட்படுத்தாத எல்லிஸ் துரை திருக்குறளையும் நாலடி நானுறையும் நுலாக அச்சிட்டு வெளியிட்டார்.
இத்தகவலை அயோத்திதாசர் தன்னுடைய தமிழன் இதழில்.
''எனது பாட்டனார் ஜார்ஜ் ரிங்டியன் துரை பட்லர் கந்தப்பன் என்பவர் ஓலைப்பிரிதியாயிருந்த திருக்குறளையும். நாலடி நானுறையும் ஈஸ்ட் இன்டியா கம்பெனியார் காலத்தில் தமிழ்ச் சங்கம் கூட்டி வைத்த கனம் எல்லீஸ் துரை அவர்களிடம் கொடுத்து அச்சுக்கு வந்திருக்கிறது"...
இதுவழியாக அந்தக் காலத்தில் ஆதி திராவிடர்கள் தமிழின் மிக அரிய நுல்களைப் பாதுகாத்து வந்திருக்கிறார்கள் என்பது இங்கு தெளிவாகப் பதிவாகிற விஷயம்.
மேலே குறிப்பிட்டது போல அயோத்தி தாசரின் காலகட்டம் 1845லிருந்து 1914 வரை. அரசியல், சமயம், இலக்கியம் போன்றவற்றில் அவர் தீவிர ஈடுபாட்டுடன் செயலாற்றிய காலகட்டம் சுமார் 1865ல் துவங்குகிறது. அந்தக் காலகட்டத்திய தலித் வாழ்வு நிலை மற்றும் தீண்டாமைக் கொடுமைகள் பற்றி இங்கு எதுவும் சொல்லித் தெரிய வேண்டிய காரியமில்லை. இனி இங்கு சொல்லப்போகும் தாசரின் சிந்தனைகளும் இலட்சியங்களும் சாதி மதமற்ற அற வாழ்க்கையும், கருணையும் அன்பும் மிக்க மேம்பட்ட மனித உறவுகளைப் பற்றியிருப்பதால் அவை அனைத்தும் மானிட இனத்துக்கே சொந்தமானவை என்று உறுதி பட எடுத்துக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது. ஏனெனில் தாசரின் சிந்தனைகளும் லட்சியங்களும் உலகுக்கு ஒளியாக உதித்த கெளதம புத்தனின் அகிம்சையில் இருந்து உருவானவை. சனாதனம், இன-நிறவாதம், ஆணாதிக்கம், மதவாதம், பயங்கரவாதம் ஆகிய சகலவிதமான வன்முறைகளுக்கும் எதிரானவை.
சாதி இழிவை அகற்றுவதை மட்டுமே தன்னுடைய முழுக் குறிக்கோளாகக் கொண்டு இயங்கி இருக்கிறார் தாசர். தீண்டாமை வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் திணிக்கப்பட்டதே ஒழிய அது ஆதிகாலம் தொட்டே இருந்தது கிடையாது என்பது அயோத்தி தாச பண்டிதரின் கருத்து. இதன் அடிப்படையிலேயே அவர் சாதி எதிர்ப்புக் கருத்துக்களையும் செயல்பாடுகளையும் அமைத்துக் கொண்டார். இது போன்ற கருத்தாங்கங்களையே பின்னாளில் பாபா சாகிப் அம்பேத்கர் போன்ற ஆய்வாளர்கள் கையாண்டார்கள் என்பது மிகவும் குறிப்பிடத் தகுந்தது. தீண்டப்படாத மக்களின் அன்றைய இழிவான வாழ்வுக்கு அவர்களையே குறை சொல்லும் கருத்துக்களுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்ததோடு தீண்டாமை நிலவுவதால் பலன் பெறும் சக்திகளாலேயே இக்கருத்து திணிக்கப் பட்டது என்னும் முடிவை தாசர் எட்டுகிறார்.
அக்காலத்திய தீண்டாமைக் கொடுமை மற்றும் சாதிய இழிவுகளுக்கு சரியான சவுக்கடி ஆதி திராவிடர்கள் ஒவ்வொரும் கல்வி மற்றும் தொழில் துறைகளில் மேன்மையான இடங்களைப் பெறுவது என்ற முடிவுக்கு வருகிறார் தாசர். அக்காலத்தில் பிரபலமாக விளங்கிய சித்த வைத்தியத் துறையைத் தனதாக்கிக் கொள்கிறார் அவர். உள்ளுக்குள் உறைந்து கிடந்த அரசியல் விழிப்புணர்வு அவரை தீவிரமாக செயல்பட வைத்திருக்கிறது.
நல்லவை. பயனுள்ளவை. சுகாதாரமானவை. பொருளாதார தாயமும் ஆதிக்கமும் தரக்கூடியவை ஆகியற்றிலிருந்து மிகவும் திட்டமிட்டுத் தலித்துக்கள் சாதி அடிப்படையில் இந்து சாஸ்திரங்களின் சார அடிப்படையில் விலக்கி வைக்கப்பட்டதை எடுத்துக் காட்டினார். உதாரணமாக, பிரிட்டிஷ் ராணுவத்திலும். மருத்துவத்துறையிலும், கிறிஸ்துவ மிஷனரிகளின் பள்ளிக்கூடங்களிலும், கிறிஸ்துவ மதத்திலும் ரம்பகாலத்தில் உயர்சாதியார்கள் சாதி, மத சாரம் பார்த்து சேர மறுத்து வந்தார்கள். இப்படி தலித்துக்கள் சாதி, மத சாரம் பார்க்க அவசியமில்லாததாலும் சாரக் கேடான விஷயங்கள் அவர்களுக்கு உரியவை என்று பிறர் கருதியதாலும், தலித்துக்கள் அந்தத் துறைகளில் சேர்ந்து நவீன வாழ்க்கையில் முன்னேற்றமடைந்து வந்தார்கள். ஆனால் தலித்துக்களின் புதிய வாழ்க்கை முன்னேற்றத்தைக் கண்ட மேல் சாதி இந்துக்கள் சாரக்கேடெல்லாம் பார்க்காமல் அந்த நவீனத் துறைகளிலும், கிறித்துவ மதத்திலும் சேர்ந்து தலித்துகளைப் பழைய சாதி சாரம் காட்டி வெளியே துரத்திய சம்பவத்தை தாசர் வேதனையோடு குறிப்பிட்டார். (1908)
"இத்தனைக்கும் சாதி மத சாரம் பார்த்த அந்தப் பெரிய சாதியோர் என்போர். காலங்காலமாக 'மதவித்தைகளையும் விருத்தி செய்கிறார்களேயன்றி, பூமியை உழும் நவீனக் கலப்பையையோ, விரைவாக நீர் பாய்ச்சும் ஏற்றத்தையோ, நெல்லையும் அரிசியையும் பிரிக்கின்ற எந்திரத்தையோ, போட்டோ கிராப், டெலிகிராப், போனோ கிராப், மோனோ கிராப், ஸ்டீம் ரயில்வே, டிராட்மவே போன்ற நவீன அறிவியல் சாதனங்களையோ கண்டுபிடிக்கவில்லை. னால் அவர்கள் பராமரித்து வரும் பழைய சாதி மத திக்க நிலையால் மட்டுமே இப்புதிய வசதி வாய்ப்புக்களை அபகரிக்க முடிகிறது" என்று வேதனைப்படுகிறார்.
இந்து சமுதாயத்தில் நல்ல இந்து கெட்ட இந்து என்பதை விட உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற ஏறுவரிசைதான் முக்கியம் என்று அம்பேத்கார் குறிப்பிடுவார். இது போன்ற வரிசைகள் இல்லாத காரணத்தால் அன்று கிறிஸ்துவ மதத்துக்கு ஏராளமான தலித்துக்கள் மாறினார்கள். ஆனால் கிறிஸ்துவத்தின் ஆர்.சி.பிரிவும், புராடஸ்டென்டு பிரிவும் இந்து மதம் போலவே சாதி பேதங்களை ஏற்றுக்கொண்டதால் அதற்கு இந்தியக் கிறிஸ்துவ மிஷனரிகளே காரணமாகிப் போனதால் அயோத்தி தாசர் அதையும் நிராகரித்தார். கிறிஸ்துவ மதம் மாறிய ஆதி திராவிடர்கள் சாதி அடையாளத்தோடு வாழ நேர்ந்ததோடு, பாதிரியார்கள், ஞானஸ்நானம், வாரக்காணிக்கை, அர்ச்சிஷ்டவர்களின் உற்சவம், புதுநன்மை, விசுவாசம், புதைக்கக்குழி தோண்டுதல், மணியடித்தல், தும்பா, குருசு, தேன், மெழுகுவர்த்தி ஆகியவற்றுக்கு விதித்த தொகைகளைக் கொடுத்து ஓட்டாண்டிகள் ஆகிறார்கள் இந்த ஆதி திராவிடர்கள் என்று தாசர் எழுதினார். புராட்டஸ்டண்டு மார்க்கத்தில் சேர்ந்து படித்துப் பதவிகள் வகித்த தலித்துக்களை சாதி இந்துக்கள் அடித்துத் துரத்தித் தாங்களே கிறிஸ்தவம் மாறினார்கள். பழைய கிறிஸ்துர்களைப் பறைக்கிறிஸ்துவர்களாக்கினார்கள். பாதிரிமார்களும் இதற்கு இடம் கொடுத்தார்கள் என்று தாசர் குறிப்பிட்டார்.
இந்தியச் சூழலில் நடைமுறையில் சாதியில் இந்துவாகவும் மதத்தில் கிறிஸ்தவனாகவும் ஏககாலத்தில் பார்ப்பனனையும், கிறிஸ்துநாதரையும் ஏற்றுக்கொள்பவன் அரைக்கிறிஸ்துவன், அரை இந்து என்றார் தாசர்.
தலித்துகளிடம் இருந்து வந்த பாரம்பரியமாக இருந்து வந்த குலதெய்வ மற்றும் கிராம தேவதை வழிபாட்டையும் கூட தாசர் ஏற்கவில்லை. தலித்துகளுக்கு மாற்று மதமாக அவர் முன்மொழிந்தது பெளத்த தன்மமே. புத்த தன்மத்தை தலித்துக்களின் தன்மமாக உலகுக்கு முன்மொழிந்த முதல் தலித் அறிஞர் அயோத்தி தாசரே.
இந்த வகையில் அவர் டாக்டர் அம்பேத்கருக்கு முன்னோடியாகத் திகழ்கிறார். தாசருக்குப்பின் சுமார் அறுபது ண்டுகள் கழித்தே அம்பேத்கர் தலித்துகளுக்கான மதமாக நவயான பெளத்த இயக்கத்தை முன் மொழிந்தார் என்பது குறிப்பிடத் தகுந்தது.
போதி சத்துவத்தின் புதிய நவீன வளர்ச்சியை, இந்தியத் துணைக்கண்டத்தின் சரித்திரத்தை புத்தமத தத்துவத்தின் அடிப்படையில் விளக்கம் தந்தார் தாசர்.
1896-98 ம் ண்டுகளில் சென்னையில் ல்காட் துரையுடன் தாசருக்குத் தொடர்பு ஏற்பட்டது. தாசரும் கிருஷ்ண சாமியார் என்னும் அவருடைய நண்பரும் ல்காட்டுடன் இலங்கை சென்று மலிகண்ட விகாரையில் சுமங்கல மஹாநாயக என்னும் பெளத்தத் துறவியிடம் பஞ்சசீலம் பெற்று பெளத்தர்கள் ஆனார்கள்.
பிறகு ல்காட் துரையின் ஒத்துழைப்புடன் சென்னை ராயப்பேட்டையில் பெளத்த விகாரையையும் பெளத்த சங்கத்தையும் நிறுவினார். சமூக வரலாற்றினை மறுவாசிப்பு செய்தல், சமய அடையாளங்களைக் கட்டி எழுப்பல் என இந்த பெளத்த சங்கங்கள் செயல்பட்டன.
1899ல் புத்தர் என்னும் இரவு பகலற்ற ஒளி என்னும் நுலை எழுதினார்.
1907லிருந்து 1914 வரை தாம் சிரியராக செயல்பட்டு நடத்திய ஓரணாத் தமிழன் வார இதழில் தொடர்ச்சியாக புத்த சமயம், அரசியல், சமூகம், இலக்கியம் குறித்த கட்டுரைகளைத் தொடர்ச்சியாக எழுதி வந்தார். தமிழனில் சி.எம்.இ.குருமூர்த்தி, சுவப்னேஸ்வரி அம்மாள் (இவர் Tamil Woman, தமிழ்ப் பெண் போன்ற இதழ்களை வெளியிட்டவர்), டி.சி.நாராயணபிள்ளை, ஏ.பி.பெரியசாமி புலவர் போன்றோர் தொடர்ச்சியாக எழுதி வந்தனர். அந்தக் காலத்திலேயே தமிழன் இதழ்களில் வெளியான கேள்வி பதில் பகுதி வழியாக அதற்கான வாசகர்கள் பரவலாக இருந்தமையை அறியமுடிகிறது.
தாசர் மற்றும் அவருடைய நண்பர்களின் முயற்சியால் பெளத்த மத செயல்பாடுகளை சென்னை, செங்கற்பட்டு, வட ற்காடு போன்ற தமிழகத்தின் வடபகுதிகளிலம் கர்நாடகத்தில் ஆதி திராவிடர்கள் பரவியிருந்த கோலார் தங்கவயல், பெங்களூர், ஹூப்ளி மற்றம் பர்மா தென்னாப்பிரிக்கா போன்ற இடங்களில் வசித்த தமிழர்கள் இடையேயும் பரவியது.
ஆங்கிலேயர் காலத்தில் கோலார் தங்கவயல் பணிகளுக்கு வட ஆற்காடு மாவட்டத்தை சேர்ந்த தலித் மக்களே அதிகம் பணியமர்த்தப்பட்டனர். அவர்களுக்கு சுயமரியாதை மிக்க வாழ்வு அங்கு கிடைத்தது. அவர்கள் பெளத்த செயல்பாடுகளை அங்கு சாத்தியமாக்கினர். தங்கள் நம்பிக்கையை இவர்கள் வட ற்காடு மாவட்டத்தின் கிராமங்களில் பரப்பினார்கள்.
அயோத்தி தாசரோடு இணைந்து செயல்பட்ட க.அப்பாதுரையார், நகுலப்பிள்ளை, சின்னப்புட்டு சாமியார், கே.சி.கிருஷ்ணசாமி, டி.எஸ்.சுந்தரம், முத்து மேஸ்திரி கியோர் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பெளத்த மதப் பணிகளை மேற்கொண்டனர். தாசருக்குப் பின்னாலும் இவர்கள் சாக்கைய பெளத்த சங்க செயல்பாடுகளை உயிரோட்டத்தோடு எடுத்துச் சென்றவர்கள்.
சென்னை ராயப்பேட்டை பெளத்த சங்கத்தில் அயோத்தி தாசர் பேசும் போது துவக்க காலத்தில் தமிழ்ப் பெரியார் திரு.வி.கல்யாண சுந்தரனார் தன் இளமைப் பருவத்தில் கற்கள் கொண்டு எறிந்து எதிர்ப்பினைத் தெரிவித்தார். பின்னாளில் அவர் காலில் ஏற்பட்ட கட்டி ஒன்றினை சித்த வைத்திய முறையில் அயோத்தி தாசர் குணமாக்கி இருக்கிறார். அயோத்தி தாசர் மறைவுக்கு மிக அற்புதமான இரங்கற்பாவினை எழுதியிருக்கிறார் திரு.வி.க. 1906ம் ண்டு வட ற்காடு மாவட்டம் திருப்பத்தூர் பெரிய பறைச்சேரி எனப்பட்ட தலித்துக்கள் வாழ்ந்த பகுதியின் பெயர் கெளதம புத்தர் வழி வந்தோர் வாழும் ஊர் என்னும் பொருளில் கெளதமாப்பேட்டை என்று மாற்றப்பட்டது. திருப்பத்தூரை சேர்ந்த ஏ.பி.பெரியசாமிப் புலவர், அனுமந்த உபாசகர் கியோர் பெளத்த சங்க செயல்பாடுகளை முடுக்கி விட்டார்கள். கெளதமாப்பேட்டையில் 1904ம் ண்டில் திட்டமிடப்பட்டு 1906 சாக்கைய பெளத்த லயம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த ண்டு அந்த லயத்துக்கு நூறு ண்டுகள் முடிவடைகின்றன. பர்மாவில் கொண்டுவரப்பட்ட ஐம்பொன்னால் ஆன புத்தர் சிலை அங்கு நிறுவப்பட்டது. அயோத்தி தாசரின் வழிகாட்டுதலுடன் அந்தப்பேட்டையில் 87 ஆதி திராவிடர்கள், முடிவெட்டுபவர்கள், சலவைத் தொழிலாளிகளின் குடும்பங்கள் பெளத்த மதத்துக்கு மாறினார்கள்.
இந்து மதத்தின் பல கூறுகளை பெளத்த மதத்தில் இருந்து தோன்றியவை என்பதைத் தீவிரமாக பிரசாரம் செய்து வந்தார் தாசர். புத்தர் இறந்த நாளை புத்தர் பலி விழாவாக போதிப்பண்டிகை என்று பூர்வ பெளத்தர்கள் கொண்டாடி வந்தார்கள். பிராமணர்கள் இதனை போகிப்பண்டிகை என்று திரித்து விட்டார்கள் என்றார் தாசர். அதேபோல திருக்குறளை திரிக்குறள் என்றும் தமிழின் பல பண்டை நூல்களை பெளத்த மத நூல்கள் என்றும் விவாதித்து வந்தார்.
வள்ளுவரை பெளத்தர் என்றும் வள்ளுவர் சொன்ன ஆதி பகவன் ஆதி பகலவன் என்றும் அது கெளதம புத்தர்தான் என்றும் இதேபோல பல குறள்களையும் பெளத்த வழியில் மறுவாசிப்பு செய்து பொருள்கூறினார்.
அயோத்தி தாசரின் முனைப்பால் உயிர்க்கொலை மறுப்புக்காக மாடு அறுக்கும் பழக்கம் பல ஊர்களின் சேரிகளை விட்டு வெளியேற்றப்பட்டது. சேரிக்கு வெளியே மாடு அறுக்கும் தொட்டி என அவை மாறின. ஊரிலும் சேரியிலும் இல்லாத பல தொட்டிகளை சேலம் மாவட்டத்திலும் தர்மபுரி, கிருஷ்ணகிரி, வட ஆற்காடு மாவட்டங்களிலும் பார்க்க முடியும்.
பெரியாரால் நடத்தப்பட்ட சுயமரியாதை இயக்கத்தின் தொடக்க காலக் கருத்தியல் மற்றும் பிரச்சார நடவடிக்கைகள் பின் வந்த பெளத்த செயல்பாட்டாளர்களோடுதான் அமைந்திருந்தன என்பதை இங்கு முக்கியமாகக் குறிப்பிட வேண்டும்.
இந்தி மொழி, இந்துச் சாதி மதத்தோடு தொடர்பு உடையது கையால் அதற்கு இந்தியாவின் பொதுமொழியாகும் தகுதி கிடையாது. ஆங்கிலமே அதற்குத் தகுதி கொண்டது என்று தாசர் பெரியாருக்கு முன்பே எழுதினார். (1911) ( ஆங்கில மொழியைத் தாய்மொழியாக்க வேண்டும் என்று கூடச் சொன்னார். அதன் தாத்பர்யத்தை இன்றைய சூழலை வைத்துப் பார்க்கக்கூடாது).
அயோத்தி தாசரின் முனைப்பினாலும் முயற்சியாலும் சென்னையில் பல பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. ஏழைகளுக்கு இலவசக் கல்வி வழங்குவதில் முன்னோடியாக இருந்தார் தாசர். இப்போது நான் சொல்லும் விஷயம் உண்மையிலேயே உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். மதிய உணவுத் திட்டத்தினை 1894ம் ஆண்டிலேயே அறிமுகப்படுத்தியவர் தாசர். சென்னை மற்றும் வட ற்காடு மாவட்டங்களில் நடந்த பள்ளிகளில் பகல் உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் அயோத்தி தாசர். இதை நான் சொல்லும்போது இந்த முன்னோட்டமான காரியம் நடந்த ஆண்டினையும் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
மொத்தத்தில் அயோத்தியா தாசரின் வாழ்வும் செயல்பாடுகளும் தமிழக வரலாற்றில் ஒரு முக்கியமான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக இருந்திருந்திருக்கிறது.
தலித்துக்களுக்கு பிராம்மணரல்லாத திராவிட அடையாளத்தை நிலை நிறுத்தியதில் முதன்மையானவர் தாசர்.
ஏற்கனவே சொன்ன ஆச்சரியத்தைப் போல இன்னும் சில ஆச்சரியங்களும் உண்டு தாசர் சரித்திரத்தில். 1895 முதல் 1907 வரை தலித்துகளுக்காக இந்திய சரித்திரத்தில் முதன்முறையாக அரசு வேலை வாய்ப்புக்களில் இட ஒதுக்கீட்டினை வற்புறுத்தினார் தாசர். இதற்காக பல ஆங்கில துரைமார்களை சந்தித்து மனுக்களை அளித்து, பல இடங்களில் பேசியும், அதிகாரிகளையும் கவர்னர்களையும் சந்தித்து தலித்துகளுக்கான இட ஒதுக்கீட்டை சாத்தியமாக்கினார். இந்திய அளவில் இந்த விஷயத்தில் முன்னோடி நம் தமிழகத்தின் அயோத்தி தாச பண்டிதர்தான் என்று நாம் பெருமையுடன் சொல்லிக்கொள்ளலாம். ஆனால் யாரும் சொல்லவில்லை. அது வேறு விஷயம்.
அயோத்தி தாசரின் இந்த இட ஒதுக்கீட்டுக் கோரிக்கை அவருக்குப் பிறகு பல மாநிலங்களில் தொடர்ந்தது. மராட்டிய சிங்கம் சத்ரபதி சிவாஜியின் வழித்தோன்றலான சத்ரபதி சாஹூ மஹராஜ் 1902 தன்னுடைய அரசாங்கத்தில் தலித்துகளுக்கான இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தினார்.
அவர் வாழ்ந்த காலத்தைப் பார்க்கும் போது அயோத்தியா தாசர் சிந்தனைத் தொகுப்பில் உள்ள பல விஷயங்கள் பல நிலைகளில் முன்னோடியானவை. இக்கால தாத்பரியத்துடன் பார்க்கும்போது சில விஷயங்கள் விவாதத்துக்கு உரியன. உதாரணத்துக்கு பண்டைய தமிழ்நூல்கள் பற்றிய அவருடைய கணிப்பு, மொழி பற்றிய கருத்துக்கள், விஞ்ஞான அடிப்படையில் அமையாத மதங்கள் பற்றிய அவருடைய கருத்துக்கள், பிரிட்டிஷ் அரசு மீது அவர் கொண்டிருந்த தேவதா விசுவாசம் போன்றவை பெரிதும் விவாதத்துக்கு உரியவை. னால் பல விஷயங்களில் அவர் வாழ்ந்த காலத்தைத் தாண்டிய பெரும்பாய்ச்சலைத் தன் சிந்தனைத் தளங்களில் நிகழ்த்தியிருக்கிறார்.
1914ம் ண்டு மே மாதம் 5ம் நாள் பண்டிதர் மறைந்தார்.
பண்டிதரின் இறுதி நாட்களைப் பற்றிய குறிப்பினை அவருடைய குமாரர் பட்டாபிராமன் அவர்களுடைய வார்த்தைகளிலேயே முடிக்கிறேன்.
அவர் வியாதியைப் பற்றிக் கொஞ்சமேனும் கவலைப்படவில்லை. தாமே கைதேர்ந்த வைத்திய பண்டித சிகாமணியாயிருந்ததினாலும் தமக்கே தம்மாயுளைக் குறித்து உணர்ச்சி இருந்ததினாலும் வைத்தியரொருவருடைய உதவியையும் அவர் கோரவில்லை. மே மாதம் 3ம் தேதி திவாரம் காலை 5 மணிக்கு பண்டிதரவர்கள் எல்லோரையும் பார்த்து இந்த தேகம் விழப்போகிறது என்றனர். அவருக்கு நெருங்கின பந்துக்களும் நண்பர்களும் அவர்களுடைய கதியைப் பற்றி அவரிடம் வினாவிய போது அவர், தருமமும் கருமமுமே உங்களைக் காக்கும் என்று திருவாய் மலர்ந்தருளினர். அடியேன் பத்திரிகையைக் குறித்து விண்ணப்பித்தபோது, அவர், திரிக்குறள் உரை இதுவரையிலும் நாம் எழுதியதோடு மாத்திரம் நிற்கவேண்டியிருக்கிறதே என்பதுதான் குறை. இந்தப் பொய்ச் சடலம் கூடியிருந்தவரையில் அவ்வளவுதான் செய்யமுடிந்தது. தமிழன் ஆகிய குழந்தையை உன் கையில் ஒப்பித்து விடுகிறேன். உன்னால் வளர்க்க முடியுமல்லவா என்றனர்.
................
பஞ்சஸ்கந்த பிரிவினை அடைந்த பிறகு அவரது திருமுக விலாசத்தை யாவரே வருணிக்கத்தக்கவர். அன்று பகலெல்லாம் அவரது உறவினரும் நண்பர்களும் சீடர்களும் நூற்றுக்கணக்காக வந்து பார்த்துவிட்டுப் போய்க்கொண்டிருந்தனர். பகல் 3 மணிக்கு அவருக்குப் பரிசளித்திருந்த 3 மெடல்களையும் அணிந்து அலங்கரித்து அவரைத் தரிசித்தோம். மாலை 5.30 மணிக்கு புஷ்பமாரி பெய்தாப்போல தூறி நிலத்தைக் குளிரச் செய்தது மனோகரமாயிருந்தது.
..........
மாலை 6 மணிக்கு சர்வாலங்கதிருதங்களோடு அவரை வெள்ளைப் பெட்டியில் வைத்து புஷ்பங்களால் அலங்கரித்திருந்த விமானத்தில் இருக்கச் செய்து பெளத்தன்ம சின்னங்களுடன் முன்னால் புத்தருடைய திவேதத்திலிருந்து உருக்கமான பாடல்களைப் பாடிக் கொண்டு வர கோலம் புறப்பட்டது. அநேக பர்மிய பெளத்த பிட்சுக்களும், இந்திய பெளத்தர்களும், பர்மிய பெளத்தர்களும் ஆயிரங்கணக்கான ஜனங்களும் கோலத்துடன் வந்தனர். பண்டித பெருமான் அவர்களே காருண்யம் பொருந்திய பிரிட்டிஷ் கவர்ன்மெண்டிலிருந்து பெளத்தர்களுக்காக வாங்கிய மயானத்திற்கு தேவ விமானம் கொண்டுபோகப் பட்டது. விமானத்தை இறக்கினதும் சென்ற 1500 வருடங்களாக நடந்திராத பெளத்த சடங்குகள் வெகு சிரத்தையுடன் நடத்தப்பட்டன....
ஏறத்தாழ எண்பது ண்டுகளுக்கும் மேலாக சரித்திரத்தில் முழுதும் மறக்கப்பட்ட ஒரு மாமனிதரை இந்த உலகுக்கு மீண்டும் உயிர்ப்பித்துக்கொடுத்த ஞான அலாய்சியஸ் அவர்களையும் பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரியின் நாட்டார் வழக்காற்றியல் மையத்தையும் மீண்டும் ஒருமுறை நன்றியுடன் நினைத்துக்கொண்டு என் உரையை முடிக்கிறேன். அயோத்தி தாசரை தில்லித் தமிழ்ச் சங்கத்தில் அறிமுகப்படுத்தும் வாய்ப்பினை எனக்கு சாத்தியப்படுத்தியவர்கள் இவர்களே.
நன்றி. வணக்கம்.
18 நவம்பர் 2006 அன்று தில்லித் தமிழ்ச் சங்கத்தில் தடம் பதித்த தமிழர்கள் தொடர் சொற்பொழிவுக் கூட்டத்தில் ஆற்றிய உரையின் சுருக்கம்.
அயோத்தி தாசரின் எழுத்துப்பணிகள் :
1. புத்தரது திவேதம் (1912)
2. Buddhist Doctrines - Questions and Answers (1912)
3. இந்திரர் தேச சரித்திரம் (1931)
4. விவாக விளக்கம் (1926)
5. ஹரிச்சந்திரனின் பொய்கள் (1931)
தமிழன் பத்திரிகை சென்னையில் 14 வருடங்களாக வெளிவந்தது. 1907 முதல் 1914 வரை அவரது ஆசிரியத்துவத்திலும், அவருக்குப்பின் அவரது புதல்வர் பட்டாபிராமன் அவர்களை சிரியராகக் கொண்டு 1919 வரையிலும் பின்னர் 1919லிருந்து 1922 வரை யார் நடத்தினார்கள் என்று தெரியவில்லை. பின்னர் 1922ல் அப்பாதுரையை ஆசிரியராகக் கொண்டு 1926லிருந்து 1935 வரை வெளிவந்ததாகவும் குறிப்புக்கள் உள்ளன.
இந்தக் கட்டுரையை எழுத எனக்குக் கிடைத்த ஆதாரங்கள்:
1. அயோத்தி தாசர் சிந்தனைகள் - தொகுப்பு 1 மற்றும் இரண்டு - ஞான அலாய்சியஸ், நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம். (2003ல் ஞான அலாய்சியஸ் தொகுத்த 3வது தொகுப்பும் வெளிவந்துள்ளது. இது தில்லியில் எனக்குப் படிக்கக் கிடைக்கவில்லை)
2. தலித்திய விமர்சனக் கட்டுரைகள் - ராஜ் கெளதமன் (காலச்சுவடு வெளியீடு)
3. க.அயோத்திதாசர் ஆய்வுகள் (ராஜ் கெளதமன் - காலச்சுவடு வெளியீடு)
4. அயோத்திதாச பண்டிதர் வழியில் வாழும் தமிழ்ப் பெளத்தம் - ஸ்டாலின் ராஜாங்கம் - காலச்சுவடு மாத இதழ்

மீள்பதிவு: சாருநிவேதிதாவின் இந்தக் கட்டுரை
நன்றி: குமுதம் தீராநதி.
[சாருநிவேதிதாவின் இந்தக் கட்டுரை முக்கியமானதாகப் பட்டதால் பதிவாக இங்கே இருக்கட்டுமே என்று பதிகிறேன். மேலும் தெரிந்தோ, தெரியாமலோ முன்னெதிர்வினை பண்ணிவிட்டதாலே இந்த பின்தொடர்வினையும் இருந்துவிட்டுப்போகட்டுமே என்று, :-) ]
பொதுவாக, இலக்கியம் என்பது சமூக ஒடுக்க முறைகளுக்கு எதிரானது; மனித விடுதலை குறித்த மதிப்பீடுகளை முன் வைப்பது. எழுத்தாளன் என்பவன் சாதி, மதம், இனம் போன்ற அடையாளங்களைத் தாண்டியவனாக _ ஒரு Icnoclast ஆக _ இருக்க வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, சமகாலத் தமிழிலக்கியவாதிகள் பெரும்பாலும் இனவாதிகளாக இருக்கின்றனர். தங்கள் சுயசாதி அபிமானத்திலிருந்துகூட இன்னும் விடுபடவில்லை. இதற்கொரு சமீபத்திய உதாரணம், சுந்தர ராமசாமி எழுதி 'காலச்சுவடு' இதழில் வெளிவந்துள்ள 'பிள்ளை கெடுத்தாள் விளை' என்ற சிறுகதை. மற்றொரு உதாரணம் 'Outlook' இதழில் வெளிவந்துள்ள அசோகமித்ரனின் பேட்டி.
முதலில் சுந்தர ராமசாமியின் சிறுகதை... நாகர்கோவிலிலிருந்து ஆறுமைல் தூரத்திலுள்ள ஒரு குக்கிராமம் _ மாடக்குழி. அங்கு வாழும் தலித் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் தாயம்மா. அவள் மாடக்குழிக்கு அருகிலிருந்த ஆளூர் என்ற ஊரில் வசிக்கும் பாதிரியார் ஒருவரிடம் கல்வி கற்றுக் கொள்கிறாள். 'ஐரோப்பாவில் மிகப் பெரிய பள்ளியில் இளங்கலை கற்றுத் தேர்ந்த பெண்ணிற்கு நிகராக இருக்கிறாள் தாயம்மா' என்று பாதிரியாரே சொல்லும் அளவிற்கு கல்வியில் தேர்ச்சி பெறுகிறாள். காலப் போக்கில் ஊர்ப் பெரியவர்களெல்லாம் சேர்ந்து மாடக் குழியிலேயே ஒரு பள்ளியை நிறுவி தாயம்மாவை தலைமையாசிரியை ஆக்குகிறார்கள். ''தாழ்ந்த ஜாதிப் பெண்ணையா தலைமைப் பொறுப்பில் போடுவது?'' என்று சிலர் எதிர்ப்பு தெரிவிக்கும் போது, ''அவளுக்கிருக்கும் யோக்கியதை உங்களில் எந்த நாய்க்கு இருக்கிறது? தாழ்ந்த ஜாதிப் பிள்ளைதான். அதற்காக? அந்தப் பிள்ளையைத் தலைமையாசிரியையாகப் போடவில்லை என்றால் நான் கமிட்டியிலிருந்து வெளியே போகிறேன்'' என்கிறார் மோகன்தாஸ் என்ற ஊர்ப் பெரியவர். அவர் ஒரு சுதந்திரப் போராட்டத் தியாகி. மூன்று ஆண்டுகள் கடும் காவலில் இருந்தவர்.
மாடக்குழி பள்ளிக்கூடத்தில் நான்காம் வகுப்புவரைதான் இருந்தது. அதற்கு மேல் படிக்க வேண்டுமென்றால் பிள்ளைகள் ஆளூர்ப் பள்ளிக்குத்தான் போக வேண்டும். அங்கேயோ மாடக்குழி பிள்ளைகளை சேர்த்துக் கொள்ள மறுத்து விரட்டி விடுகிறார்கள். அப்போது ஆறுமுகம் என்ற மாடக்குழி பெரியவர் கொந்தளிக்கிறார். தன் வயலை விற்றாவது பத்தாம் வகுப்¬பு வரையில் கொண்டு வருவதாகச் சவால் விடுகிறார். அவருக்கு ஆளூரிலிருந்து பார்வதிபுரம் வரையிலும் பரந்து கிடக்கின்றன வயல்கள். அவற்றை விற்கத் தொடங்குகிறார். ''எங்க ஊருப் பிள்ளைங்களுக்கு நான் கண் தந்து விட்டுத்தான் சாவேன்'' நான் அனாதைப் பிணமாட்டுச் சாகணும். அந்த ஒண்ணுதான் எனக்குப் பெருமை'' என்று கர்ஜிக்கிறார்.
இதை படிக்கும் உங்களுக்குப் புல்லரிக்கிறதா? ஆம். இந்தியாவில் நிலவுடைமையாளர்களெல்லாம் அந்தக் காலத்தில் அப்படித்தான் தியாகசீலர்களாக இருந்தார்கள். தங்கள் நிலத்தையெல்லாம் விற்று தாழ்த்தப்பட்டவர்களுக்காகக் கல்விச் சாலைகள் அமைத்தார்கள். தாங்கள் அனாதைப் பிணமாகச் சாவதே தங்களுக்குப் பெருமையென்று நினைத்தார்கள். அதனால்தான் இந்தியாவில் படிப்பறிவு 100% ஆக இருக்கிறது. தலித்துகளெல்லாம் சுய நிறைவு அடைந்தவர்களாக மிக கண்ணியமாக வாழ்ந்து வருகிறார்கள்!
சரி, கதையை மேலே வாசிப்போம்.... மாடக்குழி பள்ளிக்கூடம், மாடக்குழி ஹைஸ்கூலாகிறது. இதற்கிடையில் தாயம்மாவின் தகப்பன் ராசைய்யா ரகசியமாக நிலம் வாங்கி விடுகிறான். இதில் 'ரகசியமாக' என்ற வார்த்தையைக் கவனிக்கவும். மேலும் விவரிக்கிறார் சு.ரா: ''மாடக்குழி தாண்டித் தெற்கே ராசைய்யா ரகசியமாக நிலம் வாங்கிவிட்டான். வீடு கட்ட யோசனை. பணம் கொஞ்சம் குறை. தலைமையாசிரியை கையெழுத்துப் போட்டால் பணம் தருகிறோம் என்கிறார்கள் கூட்டுறவுச் சங்கத்தினர். அதன்பின் என்ன பிரச்னை? ராசைய்யா புதிய வீட்டுக்குக் குடி போனான்.''
இப்படியே நகரும் கதை, இறுதிக் கட்டத்தை அடைகிறது. மாடக்குழி ஹைஸ்கூலில் மணிகண்டன் என்ற பையன் படித்து வருகிறான். அவனோடு பலாத்காரமாக 'உறவு' கொண்டு விடுகிறாள் தாயம்மா! மறுநாள் அவளை ஊர்ப் பெரியவர்கள் பிரம்பால் அடித்து விளாசுகிறார்கள். ''ரவிக்கை அவுக்குதுக்கா ஸ்கூலுக்கு வாறே, தேவிடியா?''
இந்தக் கதைக்கு சுந்தர ராமசாமி வேறு எந்தவித விளக்கமும் கொடுத்துத் தப்பிக்க முடியாது. காரணம்: கதையை தட்டையான மொழியில், மிக வெளிப்படையாக எழுதியிருக்கிறார் அவர். சுதந்திர போராட்ட தியாகி மோகன்தாஸின் உணர்வுபூர்வமான பேச்சைக் கவனியுங்கள். தியாகத்தில் இவரையும் மிஞ்சும் ஆறுமுகம்., தன் நிலத்தையெல்லாம் விற்று ஊரிலுள்ள தாழ்த்தப்பட்ட பிள்ளைகளுக்கு கல்விக்கண் கொடுப்பவர். அனாதைப் பிணமாக சாவதே தனக்குப் பெருமையென்று கூறி அதைச் செயல்படுத்தியும் காட்டுபவர். ஆனால் தலித்துகள்? 'நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும்...' என்று உயர்சாதி வெறியர்கள் ஒரு பழமொழி சொல்வார்கள். அந்தப் பழமொழியை அடியற்றியே சுந்தர ராமசாமி இந்தக் கதையை எழுதியிருக்கிறார். மகாத்மாக்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு ஊரில் திருட்டுத்தனமாக நிலம் வாங்கி வீடு கட்டுபவன், ராசைய்யா. அவன் மகள் தாயம்மாவோ நான்காம் வகுப்பு படிக்கும் பிள்ளையைக் கெடுப்பவள். இந்தக் கதையின் முக்கியமான பகுதியே மணிகண்டனைப் பற்றிய சுந்தர ராமசாமியின் வர்ணனையான இரண்டே வார்த்தைகள்தான். 'மணிகண்டன் மாடக்குழி ஹைஸ்கூலில் நாலாவது வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான். என்ன அழகு! சற்று வசதியான குடும்பம்'.
இதில், 'என்ன அழகு' என்ற வார்த்தைகள்தான் இக்கதையின் உயர் சாதித் தடித்தனத்துக்கு உதாரணம். மேலும், தாயம்மாவின் _கீழ்ச் சாதிப் பெண்ணின் _ காமக் கொடூரச் செயலுக்கு ஏகப்பட்ட build-up களைக் கட்டிச் செல்கிறார் சு.ரா. அதில் ஒன்று: தாயம்மா பற்றி விவரணம். 'தாயம்மாவின் உடல் லேசாகக் கனக்கத் தொடங்கிற்று. பெண்களுக்குப் பொறாமை! வண்டல் திரண்டதுபோல் உடம்பு. வீட்டில் மீன் கூடை இறங்காத நாள் கிடையாது. நாளுக்கொரு சேலை.'
''டேய், உங்களையெல்லாம் வைக்க வேண்டிய இடத்தில் வைக்கணும்டா.''
''சிறுக்கிகளா... தெனந்தெனம் இப்படி மீனும் கறியுமா தின்னா தெனம் ஒரு ஆம்பளை கேக்காது ஒடம்பு?'' _உயர் சாதி வெறியர்களின் இப்படிப்பட்ட பேச்சுக்களை நாம் பலமுறை கேட்டிருக்கிறோம். பூண்டு, வெங்காயம், கிராம்பு, புலால் வகைகளை ஒதுக்கச் சொல்கிறது பிராமணீயம். காரணம், காம இச்சை கூடி விடும். கூடிவிட்டால் இப்படித்தான், நாலாம் வகுப்பு மாணவனை கெடுக்கச் சொல்லும்!
ஆக, சுந்தர ராமசாமி என்ன சொல்ல வருகிறார்? தலித்துகளை சமூகப் பொது வெளியில் விட்டால் இப்படித்தான் நடக்கும். நாலாம் வகுப்பு படிக்கும் பிள்ளையைக் கூட வன்கலவி செய்து கெடுத்து விடுவார்கள். ('தலைமையாசிரியை விளை' என்ற ஊரின் பெயரே 'பிள்ளை கெடுத்தாள் விளை' என்று மாறிவிட்டதாம்!)
தலித்துகள் மனிதர்கள் இல்லை. அவர்கள் தீண்டுவதற்குக் கூடத் தகுதியற்றவர்கள். அவர்கள் வாயிலிருந்து எச்சில் ஒழுகும். அதனால் அவர்கள் வாய்க்குக் கீழே குவளை கட்டிக் கொள்ள வேண்டும். அவர்கள் நடந்தால் தீட்டு, அவர்கள் நடக்குமிடத்தைச் சுத்தம் செய்ய அவர்கள் இடுப்பில் விளக்குமாற்றைக் கட்டிக் கொள்ள வேண்டும். இப்படியாக நூற்றாண்டு நூற்றாண்டுகளாக பிராமணர்கள் தலித்துகளை சமூக வெளியிலிருந்து ஒதுக்கி வைத்திருந்தார்கள். இத்தகைய இனவெறியையே சுந்தர ராமசாமி தனது கதையில் வெளிப்படுத்தியிருக்கிறார். உலகிலேயே கருத்துச் சுதந்திரத்தை அதிக அளவில் மதிக்கும் நாடு ஃப்ரான்ஸ். அந்த நாட்டில் கூட இப்படிப்பட்ட இனவெறியர்களை (racist) சிறையில் அடைத்து விடுவார்கள்.
சுந்தர ராமசாமி ஒன்றும் திடீரென்று இப்படி ஒருகதையை எழுதிவிடவில்லை. 'ஜே.ஜே. சில குறிப்புகள்' நாவலிலேயே இத்தகைய உயர்சாதி வெறி உண்டு. இது பற்றி அந்த நாவல் வெளி வந்த போதே_சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு_நான் எழுதியிருக்கிறேன். அவரது 'புளிய மரத்தின் கதை' நாவலிலுள்ள சாதீயம், மதத்துவேஷம் குறித்தும் அ. மார்க்ஸ், ராஜன்குறை போன்றோர் பலமுறை எழுதிவிட்டனர். சு.ரா மீது ஒன்றும் எனக்குத் தனிப்பட்ட கோபதாபங்கள் கிடையாது. அவர் எழுத்தை நான் 25 ஆண்டுகளாக விமர்சித்து வருகிறேன். அவ்வளவு விமர்சனத்துக்குமான நியாயம், ஒருவருக்கு, 'பிள்ளை கெடுத்தாள் விளை'யைப் படித்தால் விளங்கும்.
இனி 'Outlook' (11.4.2005) இதழில் வெளிவந்துள்ள அசோகமித்ரனின் பேட்டி. கீழ் வருவது அதன் தமிழ்மொழி பெயர்ப்பு:
'தமிழ் பிராமணர்கள் ஒரு நூற்றாண்டாகத் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் நிலையில் இருக்கிறார்கள். பிராமண இனம் காயடிக்கப்பட்டதாக உணர்கிறது. பிராமணர்கள் என்றைக்குமே கோஷம் போட்டதோ, கொடி பிடித்ததோ கிடையாது. அவர்கள் தங்கள் கருத்துக்களை வெகு அரிதாகவே வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார்கள். அவமானத்தைத் தாங்கிக் கொள்ள அவர்கள் பழகி விட்டார்கள். ஒருவேளை அதனாலேயே வெளிப்படையான எதிர்ப்புகளோ, எதிர்வினைகளோ இல்லாமல் இருக்கிறது. அவர்களின் நிலை முப்பதுகளிலிருந்த யூதர்களின் நிலையை ஒத்திருக்கிறது. பிராமண எதிர்ப்பு இயக்கம் ஆதிக்கத்தில் இருப்பதால், நகர்ப்புறத்து பிராமணர்கள் தங்கள் குல அடையாளங்களைத் தவிர்க்க ஆரம்பித்து விட்டனர். குடுமி போய் விட்டது. அ_பிராமணர்களைப் (பிராமணரால்லாதார்) போல் மீசை வைத்துக் கொள்கிறார்கள். பிராமணப் பேச்சு வழக்கும் போய்விட்டது. சிலர் மாமிசமும் புசிக்கின்றனர். தாம் பிராமணர் என்று அடையாளம் காணப்பட்டு விடக்கூடாது என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்கின்றனர். இதெல்லாம் உயிர் பிழைத்திருப்பதற்கான தந்திரோபாயங்கள். இன்று வெகுசில பிராமணர்களே பிராமணத் தமிழ் பேசுகின்றனர். இந்த அடையாள மறைப்புக் காரியங்களையும் (Camouflage) மீறி 50 சதவிகிதம் பிராமணர், திராவிடச் சூழலிலிருந்து வேறுபட்டேயிருக்கின்றனர். உருவத்தை வைத்தே அதை ஒருவர் அடையாளம் கண்டு கொண்டு விடலாம். அவர்களது ஆழ்மனதிலேயே (Psyche) அவர்கள் திராவிடர்களிடமிருந்து வேறுபட்டவர்களெனப் பதிந்து விட்டது.
திராவிட இயக்கம் அவர்களை வந்தேறிகள் என்றே அழைத்தது. வேதங்கள் தவிர்த்து வேறு பல புராதன நூல்களிலும் கூட பிராமணர்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் என்றும் உணவளிக்கப்பட வேண்டியவர்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் கடந்த 50 ஆண்டுகள் மிகவும் கடினமானவை. அவர்களுக்கு அரசாங்க வேலைகள் இல்லை. அவர்கள் எதைச் செய்தாலும், அதில் தங்களைத் தக்க வைத்துக் கொள்வதற்காக அதிகபட்சமாக உழைக்க வேண்டியுள்ளது. பிராமண ஒழுங்கும் கட்டுப்பாடும்தான் பிராமண இயல்புகளாக இப்போதும் நிலைத்திருப்பவை.
நான் (சங்கர) மடத்தைப் பின்பற்றுபவன் அல்ல. என்ற போதிலும், இதற்கு முந்தைய பெரியவாளின் (சந்திர சேகரேந்திர சரஸ்வதி) மீது மதிப்பு கொண்டிருந்தேன். 1951_இல் என் தாயார் விதவையானார். 1954_இல் சென்னை தி.நகருக்கு பெரியவாள் வந்து தங்கியிருந்தார். அப்போதுதான் பெரியவாளின் முன்னிலையில் முதன்முதலாக எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடினார். ஆனால் அவர் எம்.எஸ்ஸை கண்டு கொள்ளவில்லை. திரும்பத் திரும்ப பலமுறை என் தாயார் வெறும் வயிற்றுடன் ஆச்சார்யாளை தரிசிக்கச் சென்றார். ஆனால் என் தாயார் விதவை என்பதால் பெரியவாள் அவரை ஒருமுறைகூட ஆசீர்வதிக்கவில்லை. ஜெயேந்திர சரஸ்வதி வந்த பிறகு நான் மடத்துக்குச் செல்வதில்லை. சமயங்களில் ஏடாகூடமாகப் பேசி வீண் விவாதங்களைக் கிளப்பி விடுபவர் அவர். ஆனால் அவரைக் கைது செய்தது என்னை அதிர்ச்சியடைய வைத்தது. இப்போது நான் விருப்பு வெறுப்பற்ற நிலைக்கு வந்து விட்டேன். காஞ்சி மட விவகாரத்தில் இன்னும் ஏதோ ஒரு விஷயம் வெளிச்சத்துக்கு வராமல் இருக்கிறது. இந்த விவகாரம் கையாளப்படும் விதத்தைப் பார்த்தால், வேண்டுமென்றேதான் அவர் துன்புறுத்தப்படுகிறார் என்று தோன்றுகிறது; பிராமண இனமும் அவமானப்படுத்தப்படுகிறது. நம்பிக்கைக்குரிய ஒரே விஷயம் என்னவென்றால், ஏகப்பட்ட பெண்கள் அரசுக்கு எதிராகப் போராட முன் வந்திருப்பதுதான். இது உற்சாகமூட்டுவதாக இருக்கிறது. பிராமண சமூகத்திலும் இது ஒரு அசாதாரண நிகழ்வாகும்.
பிராமண சமூகத்தைத் திட்டுவதென்பது அரசியலில் மட்டும் நடக்கவில்லை. கலாச்சாரம் மற்றும் இலக்கிய உலகிலும் இதுதான் (பலருக்கும்) பொழுதுபோக்காக இருக்கிறது. தமிழ் சினிமாவும் பிராமணர்களைக் கேலி செய்கிறது. தமிழ் சினிமா காட்டும் உலகம் முழுக்க முழுக்க அ. பிராமண உலகமாகவே இருக்கிறது. இன்றைய சினிமாத்துறையில் ஒரு பிராமணன் நுழைவதென்பது மிகவும் சிரமமான ஒரு காரியம். இன்றைய தினம், தமிழ் பிராமண சமூகம் தண்டிக்கப்பட்ட (doomed) ஒரு சமூகமாகவே தெரிகிறது. இச்சமூகத்திற்கு ஒரு நல்ல தலைவர் உருவாவதற்கான அறிகுறி எனக்குத் தெரியவில்லை. ஜெயேந்திர சரஸ்வதியால் அது முடியாது. மதம் அல்லது அரசியல் பற்றிப் புரிந்து கொள்வதில் அவர் சமர்த்தர் அல்லர். ராஜாஜியால் அது சாத்தியமாகியிருக்கும். ஆனால் அவர் இன்று இல்லை. ஒரு பிராமணப் புத்தெழுச்சிக்கான வாய்ப்பு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. புரோகிதம் அல்லது வேதம் பற்றிய கல்வியால் லௌகீக வாழ்வை நடத்த முடியாது. மேலும், பிராமண நிலப்பிரபுக்களும் யாரும் இல்லை.'
அசோகமித்ரனின் மேற்கண்ட விஷ வார்த்தைகள் ஜெர்மனியிலுள்ள இன்றைய 'Skin head' நியோ நாஜிகளின் பேச்சையே நினைவுபடுத்துகிறது. ஒரு Racist manifesto வை முன் வைத்திருக்கும் அவரிடம் சில கேள்விகள்: தலித்துகள், பழங்குடியினர், சூத்திரர் என்போர் பிராமணர்களால் உருவாக்கப்பட்ட ஜாதீய அமைப்பினால் எத்தனை நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்டு வந்தார்கள் என்பதை அவர் அறிய மாட்டாரா? சாதீய ஒடுக்குமுறையைச் சட்டமாகச் செய்த மனு ஸ்ம்ருதி பற்றி அவருக்குத் தெரியாதா? மக்களில் பெரும்பான்மைப் பகுதியினர் தீண்டத்தகாதோர் என ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தது யாரால்? பிராமண சமூகம் என்றைக்கேனும் இந்தச் சமூக இழிவை சந்தித்திருக்கிறதா? தீண்டத்தகாத சாதியில் பிறந்தோரின் வலியை அசோகமித்ரனால் உணர முடியுமா? நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை தீண்டாமையை நடைமுறைப் படுத்தி வாழ்ந்து வந்தவர்கள் பிராமணர்களா அல்லது வேற்றுக் கிரகத்திலிருந்து வந்து குதித்தவர்களா? ரயில் நிலையங்களில் பிராமணர்களுக்கென்றும் சூத்திரர்களுக்கென்றும் தனித்தனி கேண்டீன்கள் இருந்ததே_அது போன்ற நடைமுறை மீண்டும் வர வேண்டும் என்கிறாரா அசோகமித்ரன்? தலித்துகளை பல நூற்றாண்டுகளாக கோவிலுக்குள் அனுமதிக்காதவர்கள் யார்? மனிதரில் பிறப்பை வைத்து உயர்வு தாழ்வு உண்டென்று நம்புகிறாரா அசோகமித்ரன்? சூத்திரன் வேதம் படித்தால் அவன் நாக்கை அறு என்றும், காதுகளால் கேட்டால் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று என்றும் மனுதர்மம் எழுதி அதை நடைமுறைப்படுத்தியவர்களுக்கா கோஷம் போடவோ கொடி பிடிக்கவோ தெரியாது? அம்பேத்கர் வெறும் கோவணத்துடன்தான் கல்வி கற்க முடிந்தது. எந்த பிராமணராவது இத்தகைய இழிவுகளை அனுபவித்ததுண்டா?
சமீப காலம் வரை_சில இடங்களில், இப்போதும் கூட _ தலித்துகள்தான் மலம் அள்ளியிருக்கின்றனர். 'இது ஒரு மனித அவலம்; இதை நிறுத்த வேண்டும்' என்று சில ஆண்டுகளுக்கு முன்பு பாராளுமன்றத்தில் பேசப்பட்டது. அசோகமித்ரனின் தி.நகர் வீட்டில் 'ஃப்ளஷ்_அவுட் லெட்ரின்' வருவதற்கு முன்பு வரை அவர் வீட்டு எடுப்புக் கக்கூஸிலிருந்து மலம் அத்தனையையும் தன் கூடையில் வாரிக் கொண்டு தன் தலையில் சுமந்து சென்ற அந்தப் பெண் தலித் இனத்தைச் சேர்ந்தவளா, பிராமண இனத்தைச் சேர்ந்தவளா? மலம் அள்ளுவதற்கென்றும், உயர் சாதியினரின் உடம்பிலுள்ள மயிரை மழிப்பதற்கென்றும் தனி சாதிகளை உருவாக்கி நடைமுறைப்படுத்தியது பிராமணரா, திராவிடரா?
சரி. அவர் கூறும் கடந்த 50 ஆண்டுக்கால வரலாற்றைப் பார்ப்போம். இப்போதும் ஒரு தலித் பஞ்சாயத்துத் தேர்தலில் நின்றால் அவர் கொல்லப்படுகிறான். வாச்சாத்தி என்ற ஊரில் எத்தனை பழங்குடியினப் பெண்கள் போலீசாரால் வன்கலவி செய்யப்பட்டனர்? இத்தகைய கொடுமையை பிராமண சமூகம் என்றாவது அனுபவித்தது உண்டா?
இன்று சமூக வெளியில் பிராமணத்தலைமை ஒரு மில்லி மீட்டர் அளவே நகர்ந்திருக்கிறது. அதற்கே இவ்வளவு பெரிய கூப்பாடா? அப்படியே தலைமை நகர்ந்திருந்தாலும் பிராமணர்கள் உருவாக்கி வைத்த அதே மதிப்பீடுகள்தானே இன்றைக்கும் ஆதிக்கத்தில் இருந்து வருகின்றன? உதாரணமாக, தீபாவளி போன்ற பண்டிகை தினங்களில் மக்களுக்கு ஆசி வழங்குபவர் சங்கராச்சாரியார் என்ற பிராமணராகத்தானே இருந்திருக்கிறார்? இவ்வளவுக்கும் அந்தத் தொலைக்காட்சி சேனலின் உரிமையாளர் அசோகமித்ரனுக்குச் சற்றும் பிடிக்காத ஒரு திராவிடக் கட்சித் தலைவர்; அ.பிராமணர். இருந்தாலும் ஆசி வழங்குவது பிராமணர்தானே?
சினிமாத்துறையில் அ.பிராமணர் ஆதிக்கம் என்று அ.மி. கூறியிருப்பது பச்சைப் பொய். பிராமணர்களை விமர்சித்து விட்டு யாருமே இன்று சினிமாத்துறையில் காலூன்ற முடியாது. அ. பிராமணராக இருந்தாலும் அவர் பிராமணராகவே தன்னை உருமாற்றிக் கொள்ள வேண்டும். அ. மி. வார்த்தையில் Camouflage. உதாரணம் இளையராஜா. இப்படி வலுக்கட்டாயமாக தங்களை பிராமண கலாச்சாரத்துக்கு மாற்றிக் கொண்டவர்கள் அநேகம், அநேகம்.
கடைசியில், பிராமண நிலப்பிரபுக்கள் இல்லையென்று வேறு புலம்புகிறார் அ.மி. எத்தனை பெரிய மோசடிப் பேச்சு இது! நடந்தது என்னவென்றால், பிராமணர்களெல்லாம் தங்கள் நிலத்தை விற்று விட்டு மாபெரும் தொழிலதிபர்களாகி விட்டனர். உதாரணமாக, அண்ணசாலையின் பெரும்பகுதி பிராமணத் தொழிலதிபர்களின் கையில்தான் இருக்கிறது. அசோகமித்ரனின் புதல்வர்கூட அத்தகைய மாபெரும் நிறுவனம் ஒன்றில்தான் பணி புரிகிறார். ஒரு தலித்துக்கு இந்த நிறுவனங்களிலெல்லாம் அவ்வளவு சுலபமாக வேலை கிடைத்து விடுமா? பிராமணர்களுக்கு அரசு வேலை கிடைக்கவில்லை என்ற பச்சைப் புளுகு வேறு. நான் பணி புரிந்த தபால்துறையில் கடந்த 50 ஆண்டுகளாக Chief Post master General பதவியில் இருந்தவர்கள் 99% பிராமணர் மட்டுமே. ஓரிருவர்தான் அ. பிராமணர். அதுவும் உயர்சாதி அ. பிராமணர்தான்; தலித் அல்ல. இந்திய தபால்துறையே அ. பிராமணர்களால் நிரம்பியதுதான். கடைநிலை ஊழியரான தபால்காரர் மட்டுமே சூத்திரர். மற்ற நிறுவனங்களிலும் இதே நிலைதான்.
தென்கலை வைணவ சமூகத்தைச் சேர்ந்த என் மனைவியின் உறவுக்காரப் பையன் ஒருவன் அதீத புத்திசாலியாக இருந்ததால் அவனிடம், ''ஏன் நீ சிவில் சர்வீஸ் பரீட்சை எழுதலாமே?' என்று கேட்டேன். ''ஸாஃப்ட்வேர் துறையில் மாதம் நாற்பதாயிரம் சம்பாதிக்கிறேன். நான் எதற்கு அய்யேயெஸ் ஆகி கண்டவருக்கெல்லாம் சலாம் போட வேண்டும்?'' என்று பதில் சொன்னான். இப்போது அமெரிக்கா போய்விட்டான். மாத ஊதியம் 2 லட்சம் ரூபாய். இதுதான் பரவலான நிலைமை. சந்தேகமிருந்தால் அசோகமித்ரன் சென்னை IITக்கு ஒரு நடை சென்று பார்த்து வரலாம். அங்கிருப்பவர்களில் எத்தனை பேர் பிராமணர், எத்தனை பேர் அ. பிராமணர் என்று தெரியும்.
மற்றொரு உதாரணம்: தமிழ் நாட்டில் உள்ள சீனியர் IASஅதிகாரிகள் 50 பேர். இவர்களில் 45 பேர் பிராமணர்கள். மீதியுள்ள அதிகாரிகளில் 4 பேர் துறை எதுவும் ஒதுக்கப்படாமல் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். அந்த 4 பேருமே தலித்துகள்! படித்த, IAS அதிகாரிகளான தலித்துகளுக்கே இந்த நிலை என்றால் கிராமங்களில் துயரப்பட்டுக் கொண்டிருக்கும் படிக்காத தலித்துகளின் நிலை எவ்வளவு கொடூரமானதாக இருக்குமென்று யூகித்துக் கொள்ளுங்கள்.
ஹிட்லரின் மந்திரிசபையில் Albert Speer என்பவர் யுத்த மந்திரியாக இருந்தார். ஹிட்லரின் வீழ்ச்சிக்குப் பிறகு இவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைத்தது. ஆனால் அவர் வதைமுகாம் நடவடிக்கைகளில் பங்கெடுத்துக் கொண்டவர் அல்ல. மட்டுமல்லாமல், அப்படிப்பட்ட வதை முகாம்கள் இருந்ததே அவருக்குத் தெரியாது. ஆனாலும் அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். எப்படி? ''வதை முகாம்கள் இருப்பது தெரியாமல் இருந்ததே நான் செய்த குற்றம்தான்'' என்றார் அவர்.
ஆனால் சில தமிழ் எழுத்தாளர்களோ தெரிந்தே இனவெறியர்களாக இருக்கிறார்கள்!

இறையாண்மையும் தேசியமும் உள்ள என் சகோதரன் ஒருவன்.
"one small coffee with cream and Sugaழ்"
என்றேன்.
"Yes Sir. come to the next window please"
என்றான்
சன்னலுக்கு அருகில் போனதும்
" Hey Whats up buddy! "
என்றான்
சிரித்தேன்
Where are you from?
என்றான்
"Sri Lanka"
என்றேன்
பிறகு எதுவுமே பேசவில்லை
என் குசராத்திய சகோதரன்
காபி இனிக்கத்தான் செய்தது
அவனுக்கு அதைபற்றி கவலை என்ன?
.