காசி : நட்சத்திரக் கேள்விகள்
1. இணையத்தில் தமிழ் உள்ளடக்கங்கள் தேவையான அளவுக்கு உள்ளன என்று
எண்ணுகிறீர்களா? கணினியும் இணையமும் கிடைக்க வசதியுள்ள தமிழர் இன்னும்
இவற்றில் அதிகமாகத் தமிழில் புழங்கவேண்டுமானால் என்னவெல்லாம்
செய்யவேண்டும்?
தேவை எவை என்பதைப்பொறுத்துத்தான் இக்கேள்விக்கான பதிலை சொல்லமுடியும்.
உதாரணமாக தமிழ் வலைப்பதிவர் உருவாக இன்று தமிழில் போதுமான அளாவுக்கு உள்ளடக்கங்கள் உள்ளன என்று சொல்லமுடியும். அவையும் மிகவும் எளிதாக பயன்படுத்தகூடியதாக, முறையாக தொகுக்கப்பட்டுள்ளனவா, ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றவா என்ற கேள்வி எழுகிறது.
ஆனால அதே நேரத்தில். ஒரு பனிரெண்டாம் வகுப்பு மாணவனுக்கு தேவையான அறிவியல் கட்டுரைகளோ அல்லது விளக்கங்களோ இருக்கின்றனவா என்றால் இல்லை என்றுதான் நான் சொல்வேன். தமிழ் இணைய உபயோகிப்பாளர்கள் எண்ணைக்கையில் அதிகமாகவிருப்போர் விருப்புக்காகவேதான் இணையததில் குடிகொண்டிருக்கிறார்கள். ஆழமான உள்ளடக்கங்களை படைப்போர், எத்துறையாயினும் கையளவே இருக்கின்றனர். இதற்கு காரணமாக நான் நினைப்பது, தமிழ் கல்வியல்துறையில் இணையம் இன்னும் முழுமையாக எட்டவில்லை என்பதுதான்.
இன்னும் ஆங்கிலம்போன்ற பன்னாட்டுப் பயன்படு மொழியுடன் தமிழ் இணைய வளர்ச்சியை ஒப்பிட்டால் உள்ளடக்கங்கள் அளவில் மிகவும் பிந்தங்கிதான் இருக்கிறோம் என்பது என் கருத்து. ஒப்பிடுவது சரியானதாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் நாம் எங்கே போகவேண்டும் என்பது ஆங்கில இணைய வளர்ச்சியைக் கொண்டே எக்காலத்திலும் அமையும்.
2. தகவல்-நுட்பப் புரட்சியின் முழுப் பயனையும் தமிழர் சமூகம்
அனுபவிக்கிறதா? உ.ம். ஊடாடுதல் (மின்னஞ்சல், குறுஞ்செய்தி, மின்னரட்டை
போன்றவை தமிழ் மூலமாக); மின்வணிகம் (வங்கி, இணையக்கடை, கட்டணம் செலுத்தல்
போன்றவை தமிழில்); அரசாளுமை (வரிவிதிப்பு, அரசாணை, அரசின் அங்கங்களிடம்
தமிழில் சேவை பெறுதல்) இதழ்கள் (செய்தி,இலக்கியம் வாசித்தல், வலைப்பதிவு,
குறும்பதிவு, போன்ற வெப் 2.0 ஊடகங்கள் தமிழில்).
இல்லை. நிச்சயமாக இல்லை. இதற்கு மிகப்பெரிய காரணமாக நான் நினைப்பது இணைய தமிழறிவியலாளர்கள் ஒற்றுமையின்மை என்றுதான் சொல்வேன். இன்னொரு கார்ணமாக, அரசு மிகவும் பிந்தங்கிய இணைய அறிவில் இருப்பது.இவ்விரண்டும் கூட எப்போது கைகோர்த்து செயற்படுவதில்லை.இவற்றை ப்ரையாரட்டைஸ் செய்தல் /வரிசைப்படுத்துதல் முதலில் செய்தல் வேண்டும்.ஆனால் அதே சமயத்தில் கொஞ்சம் கொஞ்சமான வளர்ச்சிகள் ஆங்காங்கு நடந்து கொண்டுதான் உள்ளன. ஆனால் இவற்றுக்கான காலம் மிக மிக அதிகம் என்பதும் அதனால இழப்பு நமக்குத்தான் என்பதும் நான் நன் நினைப்பது.பயனர் பகுதியிலிருந்து பார்த்தால், இன்னும் கூட இந்தியாவில்யே முழுக்க தயாரிக்கப்படும் கணினிகள்/மடிக்கணினிகள் உண்டா? அவற்றின் விலைக்கும் சராச்ரி சம்பளக்காரரின் தாங்குதன்மை என்ற சமன்பாட்டை முன்னேற்றுவதால் மட்டுமே இது சாத்தியமாகும். ஆனால் இதுவரை ஏற்பட்ட தொழில்நுட்ப வெடிப்பை நோக்கினால் நாம் மிகவும் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்றே தோன்றுகிறது. உதாரணமாக செல்பேசிகள் போன்று இலட்சக்கணக்கான மடிக்கணினிகள் வரவில்லையே ? ஏன்?
3. தன்னார்வலர்களின் பங்களிப்பும் விக்கிப்பீடியா போன்ற குழுக்களின்
பங்களிப்பும் இணையத்தில், கணினியில், தமிழின் பயன்பாடு அதிகரிக்க எந்த
அளவுக்கு உதவியுள்ளன? உங்கள் பார்வையில் முக்கியமானவை, மேலும்
முன்னெடுத்துச் செல்லவேண்டியவை என எவற்றைக்குறிப்பிடுவீர்கள்?
தன்னார்வலர்களுக்குள் குழுமனப்பான்மை மிகப்பெரிய தடைக்கல். ஆனால் அது அவசியம் என்றும் நினைக்கிறேன்.ஏனெனில் வரலாறு சரியாக் பதிக்கபடுதல் அவசியமே. இல்லை, இவற்றால் பெரிய தமிழ்பயன்பாடு அதிகரிப்பு ஏதுவும் நேர்ந்து விடவில்லை. இன்னும் கூட இணையம் ஒரு செல்வீனமாகப் பார்க்கும் அள்விலெயே தமிழ்நாட்டில் உள்ளது. இது மாறு, "இணையமும் ஒரு தமிழ் புழங்கும் இடம் "(நுட்பத்துக்கான இடமல்ல, வெறும் புழங்கும் இடம் என்று) ஆகவேண்டும்.
முன்னெடுத்துச் செல்லவேண்டியவை இரண்டு;
கணினி மற்றும் இணைய விலைவாசி குறைப்பு தமிழுக்கு உரிய மரியாதையை இணையத்தில் பெருதல். அதன் மூலம் புழக்கத்தை அதிகப்படுத்துதல்.
4. நாளையே அரசின் தகவல்-நுட்பத்துறைக்கு உங்களைத் தலைமையேற்கச்
சொன்னால் மேற்சொன்னவகையிலான தமிழ்ப் பயன்பாட்டு விரிவாக்கத்துக்கான
செயல்களாக எவற்றை உடனடியாக மேற்கொள்வீர்கள்?
1. அரசு தகவல் தொழில் நுட்பத்துறைக்கான் குழு வெளிநாடுவாழ் இணையத்தமிழர்களிடம் உத்திகளைப் பெற வழி செய்தல்.
2. ஏற்கனவே இணையமிருந்தும் தமிழ்பயன்பட்டுக்கான தடையாக கல்லூரி, பள்ளிகளில் இருப்பனவற்றை ஆராய்ந்து களைதல்.
5. தமிழ் வலைப்பதிவுகளை பற்றிய உங்கள் பொதுவான கருத்து என்ன? புதிதாக
வலைப்பதிக்க வருவோருக்கான யோசனைகளாக எவற்றைக் கூறுவீர்கள்?
பொதுவான கருத்தென்று ஏதுமில்லை. குறிப்பிட்டு கேட்டால் ஏதாவது சொல்வேன்.
பதிப்பது என்பது சொந்த வாழ்க்கை என்றாலும், சமுகத்தைப் பற்றி என்றாலும் மிகவும் பயணுள்ளது.
உதாரணமாக , என் அப்பாவிடம், என் சித்தப்பாவின் வாழ்க்கைப்பற்றி தொலைபேசியில் பேசியதை ஒரு கதையாகஎழுதி வைத்தேன். அது இன்று வாசித்தாலும் அந்த பழைய நினைவுகளை என்னிடம் பாழின்றி தருகிறது.என் மகன் ஒன்றரை வயதில் பேசத்துவங்கியதை "மைத்ரேய நிகண்டு" என்று எழுதி வைத்திருக்கிறேன். அது எனக்கு ஒரு அணிகலன் போல. எபோது விருப்பம் வருகிறதோ அப்போது வாசித்துக்கொள்வேன். அது என்னை மீளா இன்பத்தில் ஆழ்த்தி விடுகிறது.
கமலஹாசன் ஒரு படத்தில் சொல்வது போல, பதியவேண்டும். அதற்குபிறகு அதை "அனுபவிக்கனும் ; ஆராச்சி பண்ணக்கூடாது"
யோசனைகள் எனக்கு யாராவது சொன்னால் நன்றிஉடையவனாய் இருப்பேன்.
6. தமிழ்மணம் வரும் ஆகஸ்ட் 23ஆம் நாள் தன் சேவையின் ஐந்து ஆண்டுகளை
நிறைவுசெய்கிறது. இந்த 5 ஆண்டுகளில் தமிழ்மணத்தின் சேவையைப் பற்றிய
உங்கள் கருத்துகள் என்ன? வரும் ஆண்டுகளில் தமிழ்மணம் செய்யவேண்டியவை எவை?
ஐந்து நட்சத்திரங்கள்.தமிழ்மண பிற திரட்டிகளை ஒப்பிட்டு தேவையானவற்றை செய்து முன்னணியில் எப்போது இருக்கவேண்டும்.என்ன செய்யவேண்டும் என்பது பற்றி உடனடியாக கருத்துக்கள் எதுவும் தோன்றவில்லை. இருக்கும்போது எழுதுவேன்.
Labels: காசி, நட்சத்திரக் கேள்விகள்

